Published:Updated:

தமிழகத்தை உலுக்கிய விபத்து! - 7 பள்ளி மாணவர்கள் பலியான வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு!

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து வழக்கு, 6 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நீதிமன்றம்
புதுக்கோட்டை நீதிமன்றம் ( ஆர்.வெங்கடேஷ் )

கடந்த 19.06.2013ல் புதுக்கோட்டை அருகே விஜயரெகுநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9பேர், வல்லத்திராக்கோட்டை பள்ளிக்குச் செல்வதற்காக, புதுக்கோட்டையிலிருந்து வல்லத்திராக்கோட்டை பகுதிக்கு பால் ஏற்றிச் செல்ல வந்த டெம்போ வாகனத்தில், லிப்ட் கேட்டு ஏறிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி, அதிவேகமாக வந்துகொண்டு இருந்த தனியார் பேருந்து, அந்த டெம்போ வாகனத்தின் மீது மோதியதில், வாகனம் சுமார் 50அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டது.

தமிழகத்தை உலுக்கிய விபத்து! - 7 பள்ளி மாணவர்கள் பலியான வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு!

இந்தக் கோர சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 7பேர் மற்றும் டெம்போ வாகனத்தின் ஓட்டுநர் ஆறுமுகம் உட்பட 8பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வல்லத்திராக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து பேருந்தை ஓட்டி வந்த அரிமளத்தைச் சேர்ந்த பாலசந்திரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அறிவு, 8பேர் இறப்பிற்குக் காரணமாக இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பாலசந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை நீதிமன்றம்
புதுக்கோட்டை நீதிமன்றம்
ஆர்.வெங்கடேஷ்

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து வழக்கு, 6 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தனியார் பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.