Published:Updated:

ஓடும் ரயில் முன்பு செல்பி! செல்பி மோகத்தால் உயிரைவிட்ட கல்லூரி மாணவர்

புதுக்கோட்டை அருகே ஓடும் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மீது ரயில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்

செல்ஃபி மோகத்தால் விபரீதம்... தண்டவாளத்தில் நின்று படம் எடுத்த மாணவர் பரிதாப பலி!
செல்ஃபி மோகத்தால் விபரீதம்... தண்டவாளத்தில் நின்று படம் எடுத்த மாணவர் பரிதாப பலி! ( vikatan library )

புதுக்கோட்டை அருகே மச்சுவாடியைச் சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ. இவரது மகன் மணிகண்டன்(19). புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை கணிதம் படித்து வந்தார். மணிகண்டன், வழக்கமாக, தன் நண்பர்களுடன் புதுக்கோட்டை அருகே பூசத்துறையில் உள்ள வெள்ளாற்று பாலத்திற்கு சென்று அங்கு பேசிக்கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல், நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மணிகண்டன், தனது புது செல்போனில் ரயில் முன்பு நின்று செல்பி எடுக்கவும், டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றவும் திட்டமிட்டுள்ளார்.

செல்பி மோகத்தால் உயிரைவிட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன்
செல்பி மோகத்தால் உயிரைவிட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன்
vengatesh.r

இந்த நிலையில் தான் மணிகண்டனுடன், செல்பி எடுக்க மகேந்திரன் என்பவர் மட்டும் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் அந்த வழியாகச் சென்ற மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரயில் முன்பு இருவரும் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயங்களுடன் மகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி ரயில்வே போலீஸார் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ரயில்
ரயில்

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவரது தந்தை புது ஆன்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதுவும் அடம் பிடித்து அந்த போனை வாங்கி உள்ளார்.