Published:Updated:

பஞ்சாப்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோதல்; விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவன் பலி!

பஞ்சாப் கல்லூரி மாணவன் பலி

பஞ்சாப் கல்லூரி விடுதியொன்றில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இரண்டாவது மாடியிலிருந்து தவறிவிழுந்த இரு மாணவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பஞ்சாப்பின் டி.ஏ.வி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. பீகாரைச் சேர்ந்தவர்கள் என அறியப்படும் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களும், கல்லூரியில் இளங்கலை பயின்றுவந்திருக்கின்றனர்.

பஞ்சாப் கல்லூரி மாணவன் பலி
பஞ்சாப் கல்லூரி மாணவன் பலி

இது குறித்து ஊடகத்திடம் பேசிய கல்லூரியின் இணை பேராசிரியர் சஞ்சீவ் நேவல், ``அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்தனர். அதில் ஒரு மாணவன் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த கூடுதல் டி.சி.பி ஜஸ்கிரத்ஜித் தனேஜா, ``பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பணம் கொடுப்பது தொடர்பாக மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடுதல் டி.சி.பி ஜஸ்கிரத்ஜித் தனேஜா
கூடுதல் டி.சி.பி ஜஸ்கிரத்ஜித் தனேஜா

இதில் எதிர்பாராதவிதமாக, இரண்டு மாணவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்தனர். ஒருவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கிறார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனச் செய்தியாளர்களிடம் கூறினார்.