Published:Updated:

ராஜபாளையம்: மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய் விபத்தில் பலி- இரண்டாவது மகள் படுகாயம்

விபத்து

தென்காசியிலிருந்து மதுரை நோக்கி ஐயப்ப பக்தர்கள் வந்த கார், பாண்டிச்செல்வி மீது மோதியது. இந்த விபத்தில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இளைய மகளுக்குக் காயம் ஏற்பட்டது.

ராஜபாளையம்: மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய் விபத்தில் பலி- இரண்டாவது மகள் படுகாயம்

தென்காசியிலிருந்து மதுரை நோக்கி ஐயப்ப பக்தர்கள் வந்த கார், பாண்டிச்செல்வி மீது மோதியது. இந்த விபத்தில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இளைய மகளுக்குக் காயம் ஏற்பட்டது.

Published:Updated:
விபத்து

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் தங்கமுனியாண்டி. இவரின் மனைவி பாண்டிச்செல்வி (வயது 28). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். பாண்டிச்செல்வி தனது மூத்த மகளை பள்ளியில் விட்டுவிட்டு இளைய மகளுடன் வீடு திரும்பும்போது, தென்காசியிலிருந்து மதுரை நோக்கி ஐயப்ப பக்தர்கள் வந்த கார், பாண்டிச்செல்வி மீது மோதியது. இந்த விபத்தில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இளைய மகளுக்குக் காயம் ஏற்பட்டது.

மறியல்
மறியல்

விபத்தில் பாண்டிச்செல்வி இறந்த தகவலறிந்த அவரின் உறவினர்கள், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது குறித்து தகவலறிந்த சேத்தூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் ராஜபாளையம் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசியவர்கள், `இந்தச் சாலையில் வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் செல்கின்றனர். இது பற்றி பலமுறை புகார் கொடுத்துவிட்டோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக, இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்காவிட்டால் நாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ எனக் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உடனடித் தீர்வாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து, அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன் பிறகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும், விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.