Published:Updated:

`15 பேர் மரணத்துக்குக் காரணமான 80 அடிநீள சுற்றுச் சுவர்!’- அதிர்ச்சி விலகாத மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், பட்டியலின மக்கள்தான் அதிகப்படியாக வசித்துவருகிறார்கள். இந்தப் பகுதியில் பல வீடுகள் இருக்கின்றன. ஆனால், எந்த வீடும் மழையால் இடிந்துவிழவில்லை.

நடூர்  மீட்புப் பணிகள்
நடூர் மீட்புப் பணிகள்

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மழையால், மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்தநிலையில், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில், இன்று அதிகாலை 4 வீடுகள் இடிந்துவிழுந்துள்ளன.

விபத்து
விபத்து

இந்த விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானதாகச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

`இடைவிடாத சாரல் மழை; கடும் பனிமூட்டம்!’- மாறுபட்ட காலநிலையால் கலங்கும் நீலகிரி

வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 15 பேரின் குடும்பங்களுக்கும், தலா 4 லட்சம் ரூபாயை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நடூர் பகுதி
நடூர் பகுதி

இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக, நடூர் பகுதி மக்களிடம் பேசினோம். ` `இங்கு பட்டியலின மக்கள்தான் அதிகப்படியாக வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் பல வீடுகள் இருக்கின்றன. ஆனால் எந்த வீடும் மழையால் இடிந்துவிழவில்லை.

சம்பவ இடத்திலும் எந்த வீடும் தானாக இடிந்துவிழவில்லை. வீடுகளின் அருகில் உயரமாகக் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர்தான் இந்த வீடுகளின் மேல் விழுந்துள்ளது. இந்த இடம், சக்கரவர்த்தி என்பவருக்குச் சொந்தமானது. அதனால்தான் 15 பேர் பலியாகியுள்ளனர்.

கோவை நடூர்
கோவை நடூர்

வீடுகள் தாழ்வான பகுதியில் இருக்கின்றன. ஆனால், அந்த சுற்றுச் சுவர், 20, 25 அடி உயரத்தில் சுமார் 80 அடி நீளத்தில் இருக்கிறது. பல காலமாகவே, அந்த இடத்திலிருந்து வெளியாகும் கழிவுநீர், இந்தப் பகுதியில் பாய்கிறது. இதுதொடர்பாக எத்தனை முறை சொன்னாலும் பலன் இல்லை. இந்தநிலையில்தான், இப்படி ஒரு கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்கின்றனர் வேதனையுடன்.