Published:Updated:

நெல்லை கல்குவாரி விபத்து: மூவர் நிலை என்ன? - இரண்டாம் நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

தேசிய பேரிடர் மீட்புக்குழு

நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்தில் சிக்கியிருக்கும் மூவரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்து நடந்த குவாரியின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

நெல்லை கல்குவாரி விபத்து: மூவர் நிலை என்ன? - இரண்டாம் நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்தில் சிக்கியிருக்கும் மூவரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்து நடந்த குவாரியின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
தேசிய பேரிடர் மீட்புக்குழு

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கிவருகிறது. இந்த குவாரியில் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென ராட்சதப் பாறை சரிந்து விழுந்தது. அப்போது, மூன்று ஹிட்டாச்சி இயந்திரங்களும், இரு லாரிகளும் அங்கிருந்தன. அவை பாறைச் சரிவில் மூழ்கின.

மீட்கப்பட்ட பின்னர் உயிரிழந்த செல்வம்
மீட்கப்பட்ட பின்னர் உயிரிழந்த செல்வம்

குவாரியில் பணியாற்றிக்கொண்டிருந்த டிரைவர்களான முருகன், விஜய், செல்வம், ராஜேந்திரன், செல்வகுமார், முருகன் ஆகியோர் பாறைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் முருகன், விஜய் ஆகியோர் நேற்று (15-ம் தேதி) மீட்கப்பட்டனர். ஹிட்டாச்சி இயந்திரத்துடன் பாறைக்குள் புதையுண்டு கிடந்த செல்வத்தை மீட்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மீட்புப் பணிகள் நடக்கும்போதே அடுத்தடுத்து பாறைகள் சரிந்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த 30 பேர்கொண்ட குழுவினர் நள்ளிரவில் நெல்லை வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இன்று அதிகாலை முதலாகப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

மீட்புப் பணிகளைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்
மீட்புப் பணிகளைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்

பாறைச் சரிவில் சிக்கியுள்ள ஹிட்டாச்சி இயந்திரங்களும், லாரிகளும் வெளியில் தெரியாத வகையில் புதைந்துகிடக்கின்றன. அதனால் புதையுண்ட மூவரின் உடல் நிலை குறித்து அவர்களின் குடும்பத்தினர் கவலைகொள்கிறார்கள். 2-ம் நாளாக நடக்கும் மீட்புப் பணிகளை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ``கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்தது. இதுவரை இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மூன்றாவது நபராக மீட்கப்பட்ட செல்வம் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

தற்போது இடிபாடுகளில் சிக்கிய மூவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இந்தப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. குவாரியில் விதிமுறை மீறல் நடந்திருந்தால் மாவட்ட நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுத்து கல்குவாரி மூடப்படும்” என்றார்.

இதற்கிடையே, நெல்லை கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயனன் கைதுசெய்யப்பட்டார். அத்துடன், குவாரி ஒப்பந்ததாரரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், திசையன்விளை யூனியன் முன்னாள் சேர்மனுமான சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார், குவாரி மேலாளர் செபஸ்டின் ஆகியோர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ்
சர்ச்சைக்குரிய குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ்

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 304 (கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல்), 304 A (அலட்சியத்தால் பிறருக்கு உயிரிழப்பை உருவாக்குதல்), 336 (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism