Published:Updated:

பெரம்பலூர்: அதிக கூட்டம்; படிக்கட்டில் பயணம்... தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு நடந்த சோகம்

பெரம்பலூர்

அடுத்த பேருந்து, பள்ளி செல்லும் நேரத்துக்கு இல்லாததால் கூட்டம் அதிகமாக இருந்தபோதும் வேறு வழியில்லாத காரணத்தால் மாணவி அடித்துப் பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்தார்.

பெரம்பலூர்: அதிக கூட்டம்; படிக்கட்டில் பயணம்... தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு நடந்த சோகம்

அடுத்த பேருந்து, பள்ளி செல்லும் நேரத்துக்கு இல்லாததால் கூட்டம் அதிகமாக இருந்தபோதும் வேறு வழியில்லாத காரணத்தால் மாணவி அடித்துப் பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்தார்.

Published:Updated:
பெரம்பலூர்

அரசுப் பேருந்தின் படியில் பயணம் செய்த மாணவி தவறி விழுந்தபோது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதால் கை, கால் முறிவுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் விஜயலட்சுமி. இவர் அருகே உள்ள நக்க சேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவருகிறார். இந்த நிலையில், மாணவி விஜயலட்சுமி பள்ளிக்கு ச்செல்வதற்காக நக்க சேலம் வழியாக துறையூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி விஜயலட்சுமி பேருந்தின் உள்ளே செல்ல முடியாததால் முன்பக்க படியிலேயே தொங்கியபடி சென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேருந்து நக்க சேலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது ஸ்பீடு பிரேக்கர் மீது ஏறி இறங்கியதில், மாணவி விஜயலட்சுமி எதிர்பாராவிதமாகப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது அதே பேருந்தின் பின்பக்க சக்கரம் மாணவியின் காலில் ஏறி இறங்கியுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதனால், மாணவி விஜயலட்சுமிக்குக் கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. மாணவி உடலிலிருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அருகிலிருந்தவர்கள் மாணவியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். விபத்து நிகழ்ந்தவுடன் அரசுப் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். உறவினர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்பு போலீஸார் போராட்டத்தைக் கலைத்தனர். இவ்வழக்கை பாடாலூர் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவியின் உறவினர்கள் தரப்பில் பேசினோம். ”இப்பகுதியில் பள்ளி நேரங்களில் அதிக பேருந்து இயக்க வேண்டும் என்று ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை பலரிடமும் கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுத்தபாடில்லை.

பெரம்பலூர் போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

அடுத்த பேருந்துகள் பள்ளி செல்லும் நேரத்துக்கு இல்லாததால் கூட்டம் அதிகமாக இருந்தபோதும் வேறு வழியில்லாத காரணத்தால் மாணவி அடித்துப் பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்தார். ஸ்பீடு பிரேக்கர் பேருந்து ஏறி இறங்கியபோது பிடி தவறி கீழே விழுந்தார். இந்த விபத்துக்குக் காரணம் அதிகாரிகளும், டிரைவரும், கண்டக்டரும்தான். ஒரு மாணவி படியில் பயணம் செய்யும்போது அந்த மாணவியைப் பேருந்தின் உள்ளே வரவைக்க நடத்துனர் தவறிவிட்டார். இந்த மாணவிக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism