Published:Updated:

`கீழேவிழாமல் இருக்க மின்கம்பியை இறுக்கிப் பிடித்தார்' -நெல்லையில் பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்

உயிரிழந்த மாணவர் ராகுல்
உயிரிழந்த மாணவர் ராகுல்

புது வீட்டின் கட்டுமானப் பணியின்போது தண்ணீர் கொண்டு நனைப்பதற்காகப் பக்கத்து வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர், சுந்தர்ராஜ். சென்னையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் ராகுல் உலகரட்சகர்புரம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

திருச்சியில் மின்சாரம் தாக்கி பலியான விவசாயி!- காப்பாற்றச் சென்ற தாயும், மகனும் பலியான சோகம்

சுந்தர்ராஜனின் தம்பி, அப்புவிளையில் சொந்தமாக வீடு கட்டிவருகிறார். அந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கல் கட்டுமானத்தை தண்ணீரால் நனைப்பதற்காக மின்வாரியத்திடம் தனியாக இணைப்பு எடுக்காமல் அருகில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து மின்சாரத்தை எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தப் பணியின்போது வீட்டில் மோட்டார் இயக்குவதற்காக ராகுலும் சென்றிருக்கிறார். அப்போது அருகில் உள்ள வீட்டிலிருந்து மின்இணைப்பை எடுத்துவந்துள்ளார். மின் மோட்டாரில் இணைப்பைக் கொடுத்துவிட்டு சுவிட்சை ஆன் செய்வதற்கு மீண்டும் பக்கத்து வீட்டுக்குள் செல்வதற்குப் பதிலாக சுவிட்சை ஆன் செய்தபடியே மின்வயரை எடுத்து வந்துள்ளார். 

மாணவர் ராகுல்
மாணவர் ராகுல்

வீட்டுக்குள் மின்கம்பியைக் கையில் ஏந்தியபடியே வந்தபோது எதிர்பாராதவிதமாகக் கால் இடறியிருக்கிறது. கீழே விழுந்துவிடாமல் இருக்க முயன்றபோது கையில் இருந்த மின்சார வயரை இறுக்கிப் பிடித்துவிட்டார். அதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கவனக் குறைவு காரணமாகப் பள்ளி மாணவர் ஒருவர், மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு