Published:Updated:

கடலூர்: 6 சிறுமிகள் உட்பட 7 பேர் தடுப்பணையில் மூழ்கி பலி; சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்

நீரில் மூழ்கி ஏழு பேர் உயிரிழப்பு

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுமிகள் உட்பட ஏழு பேர், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்: 6 சிறுமிகள் உட்பட 7 பேர் தடுப்பணையில் மூழ்கி பலி; சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுமிகள் உட்பட ஏழு பேர், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
நீரில் மூழ்கி ஏழு பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்து இருக்கும் கீழ் அருங்குணம் - குச்சிப்பாளையம் பகுதியைக் கடந்து செல்கிறது கெடிலம் ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தற்போது பரவலாக கோடைமழை பெய்துவருவதால் இந்தத் தடுப்பணையில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

உயிரிழந்த ஏழு பேர்
உயிரிழந்த ஏழு பேர்

அந்தத் தடுப்பணையைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் அந்தத் தண்ணீரில் குளிப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பெண் பிரியா, சிறுமிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷினி, நவி ஆகியோர் அந்தத் தடுப்பணையில் குளிப்பதற்காகச் சென்றனர். தடுப்பணையில் இறங்கி, அவர்கள் தண்ணீரில் சிறிது தூரம் சென்றபோது ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என்று உயிர் பயத்தில் அவர்கள் கூச்சலிட்டதைக் கேட்டு, அங்கு ஓடி வந்த கிராம மக்கள் தடுப்பணையில் மூழ்கிய ஏழு பேரையும் மயங்கிய நிலையில் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏழு பேரும் ஏற்கெனவே மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதலமைச்சர் அறிவிப்பு
முதலமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில், உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஏழு குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism