Published:Updated:

தூத்துக்குடி: நடுக்கடலில் நங்கூரம் அறுந்த மிதவைக் கப்பல்! - மீனவர்களால் தடுக்கப்பட்ட விபத்து

கரையில் தரைதட்டி நின்ற மிதவைக் கப்பல்
News
கரையில் தரைதட்டி நின்ற மிதவைக் கப்பல்

தூத்துக்குடியில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிதவைக் கப்பலின் நங்கூரம் அறுந்து காற்றின் வேகத்தில் நகர்ந்து கடற்கரையில் தரைதட்டி நின்றது. மீனவர்கள் விழிப்புடன் செயல்பட்டதால், படகுகளில் மோதி விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்காகத் தோணிகள், சிறிய கப்பல்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதனுடன் `பார்ஜ்’ எனப்படும் சிறிய வகை மிதவைக்கலன் ஒன்றும் இயக்கப்படுகிறது. முழுவதுமாக இரும்பால் செய்யப்பட்ட மிதவைக் கப்பலைத்தான் `பார்ஜ்’ என்கிறார்கள். இந்த பார்ஜை, `டக்’ எனப்படும் இழுவைக் கப்பல் இழுத்துச் செல்லும். பார்ஜில் யாரும் பயணிக்க மாட்டார்கள். இதன் நீளம் 150 முதல் 160 அடியும், அகலம் 70 முதல் 80 அடி வரையிலும், உயரம் 50 முதல் 60 அடியும் இருக்கும். 3,000 முதல் 5,000 டன் வரை கொள்ளவு உடையது.

தரைதட்டி நின்ற மிதவைக் கப்பல்
தரைதட்டி நின்ற மிதவைக் கப்பல்

கல், மண், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருள்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. சரக்குகளை ஏற்றுவதற்காக தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகள் ஏற்றப்படும். இடம் இல்லாத சில நேரங்களில் நங்கூரப் பகுதியில் நிறுத்தப்படும். அவ்வாறு இடமில்லாத காரணத்தால் `முத்தா எமரால்ட்’ என்ற பார்ஜ், பழைய துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், திடீரென பலத்த காற்று வீசியதால் பார்ஜின் நங்கூரம் அறுந்து இழுத்துச் செல்லப்பட்டது. காற்று தெற்கு நோக்கி வீசியதால், பார்ஜ் அங்கிருந்து இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் வந்து தரைதட்டி நின்றது. பார்ஜ் கலன், காற்றின் வேகத்தில் வருவதைக் கண்ட மீனவர்கள், கடலில் நிறுத்தப்பட்டிருந்த தங்களின் ஃபைபர் படகுகளை கரைக்குக் கொண்டுவந்து பாதுகாப்பாக நிறுத்தினர்.

கரையில் தரைதட்டி நின்ற மிதவைக் கப்பல்
கரையில் தரைதட்டி நின்ற மிதவைக் கப்பல்

இதனால், அங்கிருந்த பல படகுகள் பார்ஜ் மீது மோதி விபத்தில் சிக்காமல் தப்பின. தரைதட்டி நின்ற பார்ஜ் கலனை அந்தப் பகுதி மக்கள், ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். இதையடுத்து அந்த பார்ஜ் கலனை இழுவைக் கப்பல் மூலம் மீண்டும் துறைமுகப் பகுதிக்கு இழுத்துச் செல்லும் பணி நடந்துவருகிறது.