Published:Updated:

`யூ-டர்ன் செய்தபோது மோதிய சொகுசுப் பேருந்து!' - சேலத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

சொகுசுப் பேருந்து
சொகுசுப் பேருந்து ( எம். விஜயகுமார் )

நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா மினி பேருந்து ( NPL 9Y 339) கன்னியாகுமரியில் சுற்றுலா முடித்துவிட்டு ராஜஸ்தான் நோக்கி என்.ஹெச்.7 சேலம் டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு சென்றுகொண்டிருந்தது.

சேலம் மாவட்ட ஓமலூர் அருகே சின்ன நடுப்பட்டி பிரிவு சாலையில் நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா மினி பேருந்தும் பெங்களூருரிலிருந்து கேரளா நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்தும் மோதியதில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நேபாள டிராவல்ஸ்
நேபாள டிராவல்ஸ்
எம். விஜயகுமார்

நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா மினி பேருந்து ( NPL 9Y 339) கன்னியாகுமரியில் சுற்றுலா முடித்துவிட்டு ராஜஸ்தான் நோக்கி என்.ஹெச்.7 சேலம் டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு சென்றுகொண்டிருந்தது. அப்போது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சின்ன நடுப்பட்டி பிரிவுப் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் மண்டபத்தில் தங்குவதற்காக டிராவல்ஸ் ஓட்டுநர் யூ-டர்ன் எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் பெங்களூருரிலிருந்து கேரளாவை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து நேபாளத்தைச் சேர்ந்த மினி பேருந்தின் நடுப்பகுதியில் கண் இமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பீர் பகதூர் ராய், டீக்காரம், புல் ஹரி செளத்திரி, கோபால் தமஸ், போதினி, விஷ்ணு தாங்கல் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மரணம்
மரணம்
எம். விஜயகுமார்

மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தைச் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர், கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு