Published:Updated:

கள்ளக்குறிச்சி: கார் - பேருந்து மோதி கோர விபத்து... சுற்றுலா சென்று திரும்பிய 6 பேர் பலியான சோகம்!

விபத்து

காரில் சுற்றுலாவுக்குச் சென்று இல்லம் திரும்பிய ஆறு பேர், சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி: கார் - பேருந்து மோதி கோர விபத்து... சுற்றுலா சென்று திரும்பிய 6 பேர் பலியான சோகம்!

காரில் சுற்றுலாவுக்குச் சென்று இல்லம் திரும்பிய ஆறு பேர், சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
விபத்து

சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள், நெஞ்சை முள்கொண்டு தைக்கும் சம்பவங்களாகவே அமைந்துவிடுகின்றன. நேற்று (29.08.2021) இரவு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கோர விபத்தும் அப்படிப்பட்ட ஒன்றே. காஞ்சிபுரம், சென்னையைச் சேர்ந்த ஆறு பேர், காரில் ஊட்டி வரை சுற்றுலாப்பயணம் சென்றுள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று இரவு சென்னைக்கு காரில் பயணம் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் அருகேயுள்ள புறவழிச்சாலையில் வந்தபோது, அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த்திசையில் பயணிகளுடன் சேலம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயங்கரமாக மோதியிருக்கிறது.

விபத்து
விபத்து

இந்த கோர விபத்தில் அந்த கார் அப்பளம்போல நொறுங்கியது. காரில் பயணித்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இமானுவேல், எபினேசர் பெஞ்சமின், சென்னையைச் சேர்ந்த மோனிக்கா, ரபேக்கால், ஜெசி, ஜோஸ்வா உட்பட்ட ஆகிய பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினர், காவல்துறை அதிகாரிகள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காரில் வந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சுமார் 35 பயணிகளுடன் பயணித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட 6 பேர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்தில் பலத்த காயமடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தியாகதுருகம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விபத்தில் நொறுங்கிய கார்
விபத்தில் நொறுங்கிய கார்

இது போன்ற கோர விபத்துக்கள் மனதை பதைபதைக்க வைக்கும் சம்பவங்களாகவே அமைந்துவிடுகின்றன. 'செல்லும் காரியம் அவசரம்' என்று மட்டுமே பார்க்காமல், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வாகனத்தைச் சாலையில் இயக்கினால், நமக்கு மட்டுமல்ல... நம் எதிரில் வரும் பலரது வாழ்வும் பாதிக்கப்படாமல் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism