Published:Updated:

அதிவேகமாக வந்த கார்; மும்பை கடல் பாலத்தில் நிறுத்தியிருந்த கார்கள் மீது மோதியதில் 5 பேர் பலி | Video

விபத்தில் சேதமடைந்த கார்

மும்பை கடல் பாலத்தில் அதிகாலையில் மூன்று கார்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

அதிவேகமாக வந்த கார்; மும்பை கடல் பாலத்தில் நிறுத்தியிருந்த கார்கள் மீது மோதியதில் 5 பேர் பலி | Video

மும்பை கடல் பாலத்தில் அதிகாலையில் மூன்று கார்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
விபத்தில் சேதமடைந்த கார்

மும்பையில் பாந்த்ரா-ஒர்லி இடையே நடுக்கடலில் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கடல் பாலத்தில் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது. மும்பையின் ஓர் அடையாளமாக விளங்கும் இந்தக் கடல் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடப்பதுண்டு. காரை, கடல் பாலத்தின் மத்திய பகுதிக்கு ஓட்டிச் சென்று பாலத்திலிருந்து கடலில் குதித்துவிடுவது எனச் சில விரும்பத்தகாத சம்பவங்கள்கூட நடந்தன. இதனால் கடல் பாலத்தில் எங்கும் வாகனங்களைத் தேவையில்லாமல் நிறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பாலத்தில் வாகனங்கள் எப்போதும் கண்மூடித்தனமாக, கடுமையான வேகத்தில் செல்வது வழக்கம். இன்று அதிகாலை 3:30 மணிக்கு இந்தப் பாலத்தில் வேகமாக வந்த கார் ஒன்று பாலத்தின் ஓரத்தில் நிறுத்தியிருந்த மூன்று கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் மீது மோதிக்கொண்டது. இதில் காரில் இருந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபந்து நடந்த பகுதி
விபந்து நடந்த பகுதி

மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்துக்குச் சிறிது நேரத்துக்கு முன்புதான் கடல் பாலத்தில் ஒரு விபத்து நடந்திருந்தது. அதில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத்தான் ஆம்புலன்ஸ் வந்திருந்தது என்றும், காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட இருந்த நேரத்தில் மிகவும் வேகமாக வந்த கார் மற்ற கார்கள் மீது மோதிக்கொண்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கார் மோதிய வேகத்தில் அப்பளம்போல் நொறுங்கியது.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரை வேகமாக ஓட்டிவந்த டிரைவர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவத்தால் கடல் பாலத்தில் பாந்த்ராவிலிருந்து ஒர்லி செல்லும் வழித்தடங்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடல் பாலம்
கடல் பாலம்

மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மும்பையின் மேற்குப் பகுதியிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக 2010-ம் ஆண்டு இந்தக் கடல் பாலம் கட்டப்பட்டது.