Published:Updated:

பள்ளி மேற்கூரைப் பூச்சு விழுந்து மாணவர் காயம்; தலைமையாசிரியர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

மேற்கூரைப் பூச்சு

கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில்தான், கடந்த சில தினங்களாகவே பள்ளிக்குள்வைத்து நடத்தாமல், ஆசிரியர்கள் மர நிழலில்வைத்து மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்திருக்கின்றனர்.

பள்ளி மேற்கூரைப் பூச்சு விழுந்து மாணவர் காயம்; தலைமையாசிரியர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில்தான், கடந்த சில தினங்களாகவே பள்ளிக்குள்வைத்து நடத்தாமல், ஆசிரியர்கள் மர நிழலில்வைத்து மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்திருக்கின்றனர்.

Published:Updated:
மேற்கூரைப் பூச்சு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 39 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 40 வருடங்கள் பழைமையான இந்தக் கட்டடம் கடந்த சில ஆண்டுகளாகவே பழுதடைந்திருக்கிறது. பழுதடைந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததால், இதை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆசிரியர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்தத் தகவலை கொண்டு சென்றிருக்கின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் மனுவும் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

மேற்கூரைப் பூச்சு
மேற்கூரைப் பூச்சு

கடந்த சில தினங்களாகவே பள்ளிக்குள்வைத்து நடத்தாமல், மர நிழலில்வைத்து மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் வழக்கம்போல் பள்ளி மரத்தடி நிழலில் ஆசிரியர்கள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பரத், பழுதடைந்த அந்தக் கட்டடத்துக்குள் பேனா எடுப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக பள்ளி மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு இடிந்து விழுந்ததில் மாணவனுக்கு உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவனை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தகவலறிந்த கறம்பக்குடி பி.டி.ஓ நளினி பழுதடைந்த அந்தக் கட்டடத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து, ஆலங்குடி போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளித் தலைமையாசிரியர் மகாலெட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பள்ளி மேற்கூரைப் பெயர்ந்து விழுந்து மாணவனுக்குக் காயம் ஏற்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளியின் நிலை குறித்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கு சக ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

பள்ளி மேற்கூரை
பள்ளி மேற்கூரை

இது குறித்து சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியையிடம் பேசினோம், ``எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் தான் இந்தக் கட்டடம் இருந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பும் இதேபோல், வராண்டாவில் மேற்கூரையின் சிமென்ட் பூச்சு உடைந்து கொட்டியது. ஆனால், அப்போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

அதன் பிறகே, கட்டடம் பழுதடைந்துவிட்டது; அதை மாற்றிக் கொடுக்கக் கோரி உள்ளூர் பிரமுகர்கள் தொடங்கி மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட நிர்வாகம் வரையிலும் மனுவும் கொடுத்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. அதேநேரத்தில், மாற்றுக் கட்டடமும் இல்லை. ஒருவித அச்சத்தில்தான், மாணவர்களுக்கு மரத்தடியில் வைத்து பாடம் நடத்திவந்தோம். உடனே அதிகாரிகள் மாற்றுக் கட்டடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

மாணவர்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயுமா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism