Published:Updated:

சாத்தூர்: மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கல்லூரிப் பேருந்து - 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்!

விபத்துக்குள்ளான கல்லூரிப் பேருந்து

சாத்தூர் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியில் தனியார் கல்லூரிப் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 மாணவிகள் படுகாயமடைந்தனர்.

சாத்தூர்: மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கல்லூரிப் பேருந்து - 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்!

சாத்தூர் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியில் தனியார் கல்லூரிப் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 மாணவிகள் படுகாயமடைந்தனர்.

Published:Updated:
விபத்துக்குள்ளான கல்லூரிப் பேருந்து

ஏழாயிரம்பண்ணை அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக திருவேங்கடம், கரிசல்குளம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் வந்தனர். கல்லூரிப் பேருந்தை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) ஓட்டிவந்தார்.

இந்த நிலையில், கல்லூரிப் பேருந்து சாத்தூர், ஓ.மேட்டுப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது, பேருந்தின் மெயின் ஆக்சில் கட் ஆனதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான கல்லூரிப் பேருந்து
விபத்துக்குள்ளான கல்லூரிப் பேருந்து
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விபத்தில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். அதையடுத்து, காயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த மாணவிகளில் ஆறு பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான கல்லூரிப் பேருந்து
விபத்துக்குள்ளான கல்லூரிப் பேருந்து

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா ஆகியோர் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். சாத்தூர் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய வாகனத்தை மீட்டு போக்குவரத்தைச் சரிசெய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism