Published:Updated:

Tata Tiago: 25 அடி பள்ளத்தில் விழுந்த கார்; யாருக்கும் சின்ன அடி கூட இல்லை! கட்டுமானம்தான் காரணமா?

டாடா டியாகோ விபத்து

‘‘அத்தனை அடி உயரத்தில் இருந்து விழுந்தும், பேண்ட் எய்ட் கூடத் தேவைப்படவில்லை. நல்லவேளையாக எங்கள் நான்கு பேருக்கும் எந்தக் காயங்களும் இல்லை! எங்களுக்கு மறுபிறவியை வழங்கிய டாடாவுக்கு நன்றி!’’ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

Tata Tiago: 25 அடி பள்ளத்தில் விழுந்த கார்; யாருக்கும் சின்ன அடி கூட இல்லை! கட்டுமானம்தான் காரணமா?

‘‘அத்தனை அடி உயரத்தில் இருந்து விழுந்தும், பேண்ட் எய்ட் கூடத் தேவைப்படவில்லை. நல்லவேளையாக எங்கள் நான்கு பேருக்கும் எந்தக் காயங்களும் இல்லை! எங்களுக்கு மறுபிறவியை வழங்கிய டாடாவுக்கு நன்றி!’’ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
டாடா டியாகோ விபத்து
ஜூலை மாதம் குஜராத்தில் ஒரு சம்பவம் – டாடா நிறுவனத்தின் கார் ஒன்று, ஓடும் ட்ரக்கில் நேருக்கு நேர் மோதியதில்… காரின் முன் பக்கம் முழுவதும் ட்ரக்குக்கு உள்ளே போய் லேசாகச் சிதைந்து விட்டிருந்தது. நல்லவேளையாக – டிரைவருக்கு எதுவும் ஆகாமல் எழுந்து வந்தார்.

நேற்று கேரளாவில் இதே போன்றதொரு சம்பவம். அதே டாடா கார் ஒன்று 25 அடிப் பள்ளத்தில் கீழே விழ… காருக்குச் சரியான அடி. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த காரில் இருந்த கணவன்–மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும் எந்தவிதமான பெரிய காயங்களும் இல்லாமல் எழுந்து வந்து விட்டார்கள்.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மலைச்சாலையில் சுமார் 70 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருந்தது அந்த டியாகோ கார். திடீரென சாலையின் நடுவே ஏதோ ஒன்று குறுக்கிட, அது என்ன என்று யூகிக்கும் முன்பே ஸ்டீயரிங்கைச் சட்டெனத் திருப்பியிருக்கிறார் காரை ஓட்டிய நபர். கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக, பக்கத்தில் உள்ள 25 அடிப் பள்ளத்தில் நெட்டுக்குத்தலாகக் கீழே விழ, பள்ளத்தாக்கில் இருந்த ஒரு வீட்டின் கான்க்ரீட் சுவரில் முட்டி மோதி, பிறகு தரையில் விழுந்திருக்கிறது.

காரை ஓட்டிவந்த அந்த நபர் தனது வலைதளத்தில் அந்தப் படங்களையும் விவரங்களையும் சொல்லியிருக்கிறார். அந்த போஸ்ட்டில், ‘‘அத்தனை அடி உயரத்தில் இருந்து விழுந்தும், பேண்ட் எய்ட் கூடத் தேவைப்படவில்லை. நல்லவேளையாக எங்கள் நான்கு பேருக்கும் எந்தக் காயங்களும் இல்லை! எங்களுக்கு மறுபிறவியை வழங்கிய டாடாவுக்கு நன்றி!’’ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

டாடா டியாகோ விபத்து
டாடா டியாகோ விபத்து

என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்கான டாடா டியாகோ, குடும்பத்தினருக்கு ஏற்ற ஒரு குட்டி காம்பேக்ட் கார். டாடா கார்களின் பில்டு குவாலிட்டியும் கட்டுமானமும் தரமும் இப்போதெல்லாம் வேற லெவலில் இருக்கின்றன என்பதற்கு, குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டிங்கில் பாஸ் மார்க் வாங்கும் அந்த நிறுவனத்தின் கார்களே சாட்சி!

64 கிமீ வேகத்தில் கார்களை எதிலாவது மோதவிட்டு, அதில் ஏற்படும் பாதிப்பை வைத்து ஸ்டார் ரேட்டிங் தருவதுதான் குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட். இதில் 3 ஸ்டார் ரேட்டிங் பெறுவதே கஷ்டமான நிலையில், டாடா கார்கள் 5 ஸ்டார் வாங்குவது எல்லோராலும் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

இதில் 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் கார்கள், பாதுகாப்பில் தரமான கார்களாகக் கருதப்படுகின்றன. இந்த டெஸ்ட்டில் இப்போதெல்லாம் டாடா கார்கள் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குவது சாதாரண விஷயமாகி விட்டன. டாடாவில் பஞ்ச், அல்ட்ராஸ், நெக்ஸான் போன்ற கார்கள் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார்கள். ஆனால், டாடா டியாகோவுக்கு இந்தப் பாதுகாப்புச் சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே கிடைத்தது கவனிக்க வேண்டிய விஷயம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விபத்தில் பயணிகள் உயிர் தப்பினாலும், கார் கடுமையாகச் சேதமடைந்திருக்கிறது. இந்த டியாகோ காரை, தனது 3–வது மகளாகவும், அது சிதிலமடைந்ததைப் பார்க்கக் கஷ்டமாக இருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.

டாடா டியாகோ விபத்து
டாடா டியாகோ விபத்து

இந்த டியாகோவில் 2 காற்றுப்பைகளும் விரிந்ததால், பயணிகளுக்கும் பெரிதாக அடியில்லை. பயணிகள் உயிர் தப்பிய இதுபோன்ற விபத்துகளில் ஒரு விஷயம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. அது, முன் பக்கம் கார்களில் எக்ஸ்ட்ரா பம்பர்கள் என்று சொல்லக்கூடிய க்ராஷ் கார்டுகளைப் பொருத்தாமல் இருந்ததுதான் முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

இப்படிப்பட்ட விபத்துகளில், Crumple Zone என்கிற விதிப்படி கார் நசுங்க வேண்டும் என்பதுதான் விதி. அப்போது ஏற்படும் காற்றுப் பை டெப்ளாய்மென்ட்டில் பயணிகள் நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள். எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட கார்களில் என்னதான் காற்றுப்பைகள் விரிந்தாலும், அந்த பம்பரே பயணிகளுக்கு எமனாகும் என்பதுதான் உண்மை. அதற்காக கார் நசுங்கினால், பயணிகள் உயிர் பிழைத்துவிடுவார்களா என்பதும் தேவையற்ற விவாதம்.

டாடா டியாகோ விபத்து
டாடா டியாகோ விபத்து

அப்படியென்றால், அண்மையில் காக்காபாளையத்தில் நடந்த மஹிந்திரா எக்ஸ்யூவி கார் விபத்தில் பம்பர் இல்லாமல்தான் இருந்தது. அப்படியும் உயிர்ப்பலி நடந்ததே என்றால்… அந்த விபத்துக்கு அதிகப்படியான வேகமும் ஒரு முக்கியக் காரணம். என்னதான் கார் கட்டுமானத்தில் கிண்ணென்று இருந்தாலும், அதிவேகம் எப்போதுமே ஆபத்துதான்!

எப்படி இருந்தாலும், டாடா கார்களின் கட்டுமானத்துக்கு ஒரு ஷொட்டு வைத்தே ஆக வேண்டும்!