Published:Updated:

உ.பி: எல்இடி டி.வி வெடித்து விபத்து; பலியான 16 வயது சிறுமி... சிகிச்சையில் மூவர்!

விபத்து

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எல்.இ.டி டி.வி வெடித்ததில் 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உ.பி: எல்இடி டி.வி வெடித்து விபத்து; பலியான 16 வயது சிறுமி... சிகிச்சையில் மூவர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எல்.இ.டி டி.வி வெடித்ததில் 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்திலுள்ள ஒரு வீட்டில் எல்.இ.டி டி.வி வெடித்ததில் 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவர் தாய், சகோதரர், நண்பர் என மூவர் இந்த விபத்தில் காயமடைந்ததாகக் கூறப்படுகியது. இது தொடர்பாக அண்டைவீட்டாரான வினிதா, "பலத்த சத்தம் கேட்டது. சிலிண்டர் வெடித்துவிட்டது என்று நினைத்தேன். அதனால், எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தோம். அதன் பிறகே பக்கத்து வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டோம்" என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, ``இந்த விபத்தில் எல்.இ.டி டி.வி வெடிப்பு மிகவும் பலமாக இருந்திருக்கிறது. இந்த வெடிப்பால் கான்கிரீட் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருக்கிறது, இது அக்கம் பக்கத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது. ஓமேந்திரா என்ற அந்தச் சிறுமியின் முகம், மார்பு, கழுத்தில் வெடி விபத்தால் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

மரணம்
மரணம்

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.