Published:Updated:

விழுப்புரம்: சாலையோர பாதுகாப்புத் தடுப்பில் பாய்ந்த வேன்; வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது விபத்து

விபத்து
News
விபத்து

சென்னையிலிருந்து புதுவைக்கு 10 பேருடன் பயணித்த டெம்போ டிராவலர் கிளியனூர் அருகே கோர விபத்தில் சிக்கியது.

விழுப்புரம்: சாலையோர பாதுகாப்புத் தடுப்பில் பாய்ந்த வேன்; வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது விபத்து

சென்னையிலிருந்து புதுவைக்கு 10 பேருடன் பயணித்த டெம்போ டிராவலர் கிளியனூர் அருகே கோர விபத்தில் சிக்கியது.

Published:Updated:
விபத்து
News
விபத்து

புதுச்சேரி, சாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர், சுஜாதா, சுகந்தன். இவர்களுடைய ஊரைச் சேர்ந்த உறவினர்கள், குழந்தை உட்பட ஆறு பேர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று ஊருக்கு வருவதாக இருந்திருக்கிறது. எனவே, பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர்களை ஊருக்கு அழைத்து வருவதற்காக, இந்த மூன்று பேரும் டெம்போ டிராவலர் மூலமாக நேற்றிரவே சென்னை விமான நிலையம் சென்றனராம். வாகனத்தை புதுச்சேரியைச் சேர்ந்த துரை என்பவர் இயக்கியிருக்கிறார்.

விபத்து
விபத்து

இந்த நிலையில், இன்று காலையில் சுரேஷ், விக்னேஷ்வரன், அலுயன், தமிழரசி, வினோதினி, பெண் குழந்தை உட்பட ஆறு பேர் பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை வந்திருக்கின்றனர். அவர்களை அழைத்துக்கொண்டு 10 பேருடன் புதுச்சேரியை நோக்கி தேசிய நெடுஞ்சாலை வழியே டெம்போ டிராவலர் பயணப்பட்டிருக்கிறது. மதியம் 12:30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், கேனிப்பட்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் தூக்க கலக்கத்தினால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, நெடுஞ்சாலையின் இடப்புறமாகப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தகர தடுப்பில் வாகனம் அதிவேகமாக மோதியிருக்கிறது. இதில் அந்தத் தகர தடுப்பு, வாகனத்தில் முன் பகுதியிலிருந்து கிழித்துக்கொண்டு பின் பகுதியைத் தாண்டி சென்றிருக்கிறது. இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

மேலும், ஒன்றரை வயது பெண் குழந்தை அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒருவருக்கு கால் பறிபோகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கிளியனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்களை அழைத்துக்கொண்டு பயணித்தபோது, வாகனம் கோர விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.