Published:Updated:

கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்து கோர விபத்து! - வாகன ஓட்டிகள் அச்சம்

கோர விபத்து

சென்னை, கத்திபாரா மேம்பாலம் அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஏற்பட்ட விபத்து வாகன ஓட்டிகளை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்து கோர விபத்து! - வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை, கத்திபாரா மேம்பாலம் அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஏற்பட்ட விபத்து வாகன ஓட்டிகளை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Published:Updated:
கோர விபத்து

சென்னை, கத்திபாரா மேம்பாலம் அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய வழிகாட்டி பலகை இன்று மதியம் எதிர்பாராத விதமாக இருபக்க கம்பங்களுடன் சேர்ந்து விழுந்தது. இதில் துரதிஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலையில் டூவீலரில் பயணித்துக் கொண்டிருந்த இருவர்மீது அந்தப் பலகை விழுந்தது... அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து
விபத்து

மேலும், படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல, அந்த பெயர்ப் பலகை அந்த டூவீலர் மட்டுமின்றி அரசுப் பேருந்து ஒன்றின் மீதும் விழுந்தது. அதில் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

விபத்து
விபத்து

இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையின் முக்கிய சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து வாகன ஓட்டிகள் அனைவரையும் மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.