Published:Updated:

`லாரியில் கசிந்த கேஸ்.. சாலையில் நிறுத்திவிட்டு ஓடிய ஓட்டுநர்’ - ஓசூரைப் பதற வைத்த தீ விபத்து

தீயணைப்பு
தீயணைப்பு ( எம்.விஜயகுமார் )

சாலையின் இருபுறமும் இருந்த கடைக்காரர்களும் கடையின் முன்பக்கக் கதவினைத் தாழிட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். கேஸ் கசிவு திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பல மீட்டர் தூரத்திற்கு அனல் வீசியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பிஸ்மில்லா நகரில் கோ கேஸ் என்னும் தனியார் சமையல் சிலிண்டர் கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கேஸ் நிறுவனத்திலிருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு சுமார் 750 சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஓசூரை நோக்கி வந்தது. இந்த லாரி அலசநத்தம் பகுதிக்கு வந்த போது சிலிண்டர்களிலிருந்து கேஸ் கசிவதை அறிந்த ஓட்டுநர் அலசநத்தம் நடுச்சாலையிலேயே லாரியை நிறுத்தி விட்டார். பிறகு அப்பகுதி மக்களை ஓடி விடுமாறு கூறி அங்கிருந்து அனைவரும் ஓடினார்கள்.

ஆட்டோ
ஆட்டோ
எம்.விஜயகுமார்

சாலையின் இருபுறமும் இருந்த கடைக்காரர்களும் கடையின் முன்பக்கக் கதவினைத் தாழிட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். கேஸ் கசிவு திடீரென தீ பிடித்து எரிந்ததால் பல மீட்டர் தூரத்திற்கு அனல் வீசியது. மேலும் லாரியிலிருந்த காலி சிலிண்டர்கள் கீழே விழுந்தன. லாரி முழுமையாகத் தீப்பிடித்து கரும்புகை கிளம்பியதால் தீ அருகில் இருந்த இறைச்சிக் கடை, மருந்தகம், எம்.டி.எம் மையம், மளிகைக் கடைகளுக்குப் பரவியது. இதில் 10க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து முழுமையாக நாசமடைந்தன.

சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவும், முழுமையாக எரிந்தது. அதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலால் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கடைகள், வாகனங்களில் பரவி வந்த தீயை அணைத்தனர். பிறகு லாரி மீது நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்து முழுமையாகத் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

பாதிப்பு
பாதிப்பு
எம்.விஜயகுமார்

இச்சம்பவத்தால் எவ்வித உயிர் சேதங்களும் இல்லாத நிலையில் இறைச்சிக் கடை சாம்சுன் என்கிற இளைஞரும், பிரியாணிக் கடையைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணும், காயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டதால் சேதங்கள் குறித்து ஓசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு