Published:Updated:

விவாகரத்துக்குப் பின் மீண்டும் இணைந்த தம்பதி; சோகத்தில் முடிந்த பயணம் - நேபாள விமான விபத்தில் துயரம்

விமானம் ( ட்விட்டர் )

பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள் சேர்ந்து சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட விமான விபத்தில் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்துக்குப் பின் மீண்டும் இணைந்த தம்பதி; சோகத்தில் முடிந்த பயணம் - நேபாள விமான விபத்தில் துயரம்

பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள் சேர்ந்து சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட விமான விபத்தில் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
விமானம் ( ட்விட்டர் )

அசோக் திரிபாதி (54) ஒடிசாவில் ஒரு நிறுவனத்தை நடத்திவந்தார். பைரவி (51) மும்பை பி.கே.சி வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு தனுஷ் (22), ரித்திகா (15) என இரண்டு பிள்ளைகள். அஷோக் - பைரவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதனால் பிள்ளைகளுடன் பைரவி மும்பையில் ஒரு குடியிருப்பில் வசித்துவந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுக்காக சுற்றுலா செல்லப் பேசி முடிவுசெய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சுற்றுலா நகரமான ஜோம்சம் நகருக்கு நேபாளத்தின் பொக்காராவிலிருந்து நேற்று முன்தினம் காலை தாரா ஏர் என்ற விமானம் 22 பயணிகளுடன் புறப்பட்டது. அதில் அஷோக் திரிபாதி குடும்பமும் புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விமானம் மாயமானது.

விபத்துக்குள்ளான விமானம்
விபத்துக்குள்ளான விமானம்
ட்விட்டர்

அந்த விமானம் நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. விமான விபத்தில் சிக்கியவர்களில் நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நேபாளம் சென்று மீண்டும் இணைந்து தங்களின் வாழ்வை வாழ நினைத்தவர்களை மரணம் தழுவிக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism