Published:Updated:

இடுக்கி: கால்நடைகளை கொன்று வந்த சிறுத்தை! கத்தியால் வெட்டிக் கொன்ற விவசாயி; நடந்தது என்ன?

சிறுத்தை

திடீரென அவருக்கு அருகில் குதித்த சிறுத்தை கோபாலனை தாக்கியது. சுதாரித்துக் கொண்ட கோபாலன் தன் கையில் இருந்த வெட்டு கத்தியால் சிறுத்தையின் கழுத்தை வெட்டினார். வெட்டு ஆழமாக பதிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சிறுத்தை உயிரிழந்தது.

இடுக்கி: கால்நடைகளை கொன்று வந்த சிறுத்தை! கத்தியால் வெட்டிக் கொன்ற விவசாயி; நடந்தது என்ன?

திடீரென அவருக்கு அருகில் குதித்த சிறுத்தை கோபாலனை தாக்கியது. சுதாரித்துக் கொண்ட கோபாலன் தன் கையில் இருந்த வெட்டு கத்தியால் சிறுத்தையின் கழுத்தை வெட்டினார். வெட்டு ஆழமாக பதிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சிறுத்தை உயிரிழந்தது.

Published:Updated:
சிறுத்தை

​இடுக்கி மாவட்டம் மாங்குளம் அருகே உள்ள சி​க்​க​ண​ம்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ​மலைவாழ் விவசாயி ​கோபாலன்​(45)​. இவர் அருகேயுள்ள தனது ​தோட்டத்துக்கு வீட்டி​லிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ​​திடீரென அவருக்கு அருகாமையில் குதித்த சிறுத்தை கோபாலனை தாக்கியது.

இறந்த சிறுத்தை
இறந்த சிறுத்தை

சுதாரித்துக் கொண்ட கோபாலன் தன் கையில் இருந்த வெட்டு கத்தியால் சிறுத்தையின் கழுத்தை வெட்டினார். வெட்டு ஆழமாக பதிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சிறுத்தை உயிரிழந்தது. சிறுத்தை தாக்கியதில் கோபாலனுக்கு கையில் பலமான கீறல் காரணமாக காயமடைந்த அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சையில் கோபாலன்
சிகிச்சையில் கோபாலன்

​இந்திய வனவிலங்கு (பாதுகாப்புச்)சட்டம் 1972 இன் கீழ் அட்டவணை ஒன்றில் சிறுத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் ஏழு ஆண்டுகள் கோபாலனுக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்கிற நிலையில், வனத்துறையினர் இது தற்காப்பு நடவடிக்கை என்று கோபாலனை விடுவித்து இருக்கிறார்கள்.​ மாங்குளம் வனத்துறை அதிகாரி ஜெயசந்திரன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறந்த சிறுத்தையின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவுள்ளது. கால்நடை மருத்துவர், வனத்துறை அதிகாரி, ஊராட்சி உறுப்பினர் உள்பட 6 பேர் கொண்ட குழுவை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அமைத்துள்ளது.

காயமடைந்த கோபாலன்
காயமடைந்த கோபாலன்

இதே சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தாலும், கூண்டில் அகப்படாமல் சாலையில் வருவோர் போவோர்களை தாக்கும் அளவிற்கு, நிலைமை தீவிரமடைந்திருக்கிறது.​ ​​மேலும் இந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் புகுந்து கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கொன்றுள்ளது.

விவசாயிகள்
விவசாயிகள்

மூணாறில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த மாங்குளம் ஒரு அடர்ந்த வனப் பகுதியாகும். ​இப்​பகுதிகளில் ஐந்து தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயங்களை அமைத்த கேரள மாநில அரசு​, அடர்ந்த வனப் பகுதியான மாங்குளத்தை ​புலிகள் காப்பாகமாக மாற்றி கண்காணிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.