Election bannerElection banner
Published:Updated:

காதலனின் உயிரைப் பறித்த காதலியின் விபரீத ஆசை! நாக்பூர் சோகம்

காதலர்கள்
காதலர்கள் ( Representational Image )

ஊழியர்கள் வந்து அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை சோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

காதலர்கள் தனிமையில் இருக்கும்போது மேற்கொள்ளும் சில வித்தியாசமான முயற்சிகள் சமயத்தில் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அது போன்ற ஒரு சம்பவம்தான் இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடந்திருக்கிறது. நாக்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றுக்கு நேற்று முன்தினம் இரவு 28 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

சென்னை: புத்தாண்டுக்கு பிரியாணி கேட்ட மாணவி - விபரீத முடிவை எடுத்ததால் குடும்பத்தினர் சோகம்

அவர்கள் இரண்டு பேரும் தங்களது மொபைல்போனில் ஆபாசப் படங்களைப் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. அதிலிருந்த சில விபரீதமான காட்சிகளைப் பார்த்துவிட்டு அதே போன்ற முயற்சியில் ஈடுபட முயன்றனர். காதலி, தனது காதலனை அங்கிருந்த ஓர் இருக்கையில் உட்காரவைத்து கை, கால்களைக் கட்டினார். அதோடு விடாமல் கழுத்தையும் சேர்த்துக் கட்டினார்.

பின்னர் மகிழ்ச்சியாக இருந்த காதலி, அங்கிருந்த கழிவறைக்குச் சென்றபோது காதலன் தனது உடம்பிலுள்ள கயிற்றை அவிழ்க்க முயன்றிருக்கிறார். அந்தநேரம் எதிர்பாராதவிதமாக இருக்கை கீழே விழுந்துவிட்டது. இதில் கழுத்தில் இருந்த கயிறு கழுத்தை இறுக்கிவிட்டது. கழிவறையிலிருந்து வெளியில் வந்த காதலி, தனது காதலன் பேச்சுமூச்சில்லாமல் கிடப்பதைக் கண்டு, உடனே லாட்ஜ் ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தார்.

காதலர்கள்
காதலர்கள்
Representational Image

ஊழியர்கள் வந்து அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைச் சோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, காதலியிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு