Published:Updated:

வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு! வனஅதிகாரியை தாக்கிய சிறுத்தையா?

பலியான சிறுத்தை

உதவி வன பாதுகாவலர் தாக்கப்பட்ட வனப்பகுதியில் மீண்டும் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு! வனஅதிகாரியை தாக்கிய சிறுத்தையா?

உதவி வன பாதுகாவலர் தாக்கப்பட்ட வனப்பகுதியில் மீண்டும் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
பலியான சிறுத்தை

​​தேனி வனக்கோட்டம் பெரியகுளம் அருகே உள்ள வறட்டாறு வனப்பகுதிக்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் வனத்துறை சார்பில் சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியில் நேற்று முன்தினம் காலை சிறுத்தை ஒன்று சிக்கியதை அறிந்த வனத்துறையினர் உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் மீட்புப் பணிக்குச் சென்றனர். 

வனஅதிகாரியை தாக்கிய சிறுத்தை
வனஅதிகாரியை தாக்கிய சிறுத்தை

​அப்போது வேலியில் இருந்து தாவிய சிறுத்தை எதிர்பாராத விதமாக உதவி வன பாதுகாவலர் மகேந்திரனை தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதில் கை மற்றும் வயிறு பகுதியில் காயமடைந்த உதவி வன பாதுகாவலர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வ​ருகிறார்.

​இந்நிலையில் உதவி வன பாதுகாவலர் தாக்கப்பட்ட வனப்பகுதியில் மீண்டும் வேலியில் சிக்கிய சிறுத்தை ஒன்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து ​நிகழ்விடத்திற்கு சென்ற வனத்துறையினர்​,​ கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உயிரிழந்த சிறுத்தையை உடற்கூறாய்வு செய்து அங்கேயே அடக்கம் செய்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான சிறுத்தை
பலியான சிறுத்தை

​உதவி வன பாதுகாவலர் தாக்கப்பட்ட வனப்பகுதியில் மீண்டும் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வேலியில் சிக்கிய சிறுத்தையை வனஅதிகாரி மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் மீட்டபோது காயம் ஏற்பட்டிருக்கலாம். அந்தக் காயத்துடன் தப்பிக்க முயன்ற சிறுத்தை வேறொரு வேலியில் சிக்கி இறந்திருக்கலாம் என வன ஆர்வலர்கள் சந்தேகின்றனர்.