Published:Updated:

கேரளா: காட்டுயானை மிதித்ததில் உயிரிழந்த தேனி பெண்! - அச்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
யானை தாக்கியதில் உயிரிழந்த விமலா
யானை தாக்கியதில் உயிரிழந்த விமலா

கேரளாவில் தேனியைச் சேர்ந்த பெண், ஏலத்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டம், பொடிமெட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரின் மனைவி விமலா. இவர்களுக்கு இளங்கோவன், கோபி என இரண்டு மகன்கள் உள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், பூப்பாறை அருகேயுள்ள கோரம்பாறையில் இவர்களுக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் ஏலக்காய் தோட்டம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக ஏலத் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி ஏலக்காய் விவசாயம் செய்துவருகிறார்கள். இந்தநிலையில், வழக்கம்போல விமலா, ஏலத்தோட்டத்தில் களையெடுப்பு பணியைச் செய்துகொண்டிருந்தார்.

விமலாவைத் தாக்கிய யானைக்கூட்டம்
விமலாவைத் தாக்கிய யானைக்கூட்டம்

அப்போது, அந்தத் தோட்டத்தின் வழியே, காட்டுயானைக் கூட்டம் கடந்து சென்றுகொண்டிருந்தது. யானைகளைப் பார்த்த விமலா, அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார். பதற்றத்தில் ஓடிய விமலா கால் இடறிக் கீழே விழுந்துள்ளார். அதில், ஒற்றை யானை ஒன்று, துதிக்கையால் விமலாவைத் தூக்கி வீசியது. பின்னர் காலால் மிதித்ததாகவும் சொல்லப்படுகிறது. விமலாவின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியினர் வந்து பார்த்தபோது, படுகாயங்களுடன் விமலா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

நீலகிரி: வழிபாட்டுக்குச் சென்ற முதியவருக்கு நேர்ந்த பயங்கரம்! யானை தாக்கி உயிரிழந்த சோகம்!

உடனே, அவரை மீட்டு ஆம்புலன்ஸில் அடிமாலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே விமலா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தொடர்ச்சியாக பூப்பாறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த யானைக் கூட்டத்தின் நடமாட்டத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இதேபோல, தேனி மாவட்டத்தில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, போன்ற 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள், ஏலத்தோட்டங்கள் உள்ளன. அங்கும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.

உயிரிழந்த நிலையில் விமலா
உயிரிழந்த நிலையில் விமலா

இவை, பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்களைத் தொந்தரவு செய்வதில்லை என்றாலும், கேரளாவில் ஏலத்தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை காட்டுயானை தாக்கிய சம்பவம், தேனி மாவட்ட மலைக்கிராம தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு