Published:Updated:

கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி; திருவிழாவுக்கு வந்த இடத்தில் சோகம் - நடந்தது என்ன?

பலி

பன்னீர்செல்வம் நீரில் மூழ்கும் சிறுவர்களைக் காப்பாற்ற, கண்மாயில் குதித்திருக்கிறார். அவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் நால்வருமே நீரில் மூழ்கியுள்ளனர். நால்வரில் 7 வயது சிறுவன் ருத்ரன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி; திருவிழாவுக்கு வந்த இடத்தில் சோகம் - நடந்தது என்ன?

பன்னீர்செல்வம் நீரில் மூழ்கும் சிறுவர்களைக் காப்பாற்ற, கண்மாயில் குதித்திருக்கிறார். அவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் நால்வருமே நீரில் மூழ்கியுள்ளனர். நால்வரில் 7 வயது சிறுவன் ருத்ரன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

Published:Updated:
பலி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்துவருகிறது. இந்த விழாவுக்கு கைலாசபட்டியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் வீட்டுக்கு அவரின் உறவினர்களான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், பாபு, பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் குடும்பத்தினருடன் வந்துள்ளனர்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

இந்நிலையில் நேற்று மாலை பன்னீர்செல்வம் (24) என்பவருடன் சபரிவாசன் (10), மணிமாறன் (10), ருத்ரன் (7) மூன்று சிறுவர்களும் சேர்ந்து அருகே உள்ள பாப்பிபட்டி கண்மாயில் குளிக்கச் சென்றபோது மூன்று சிறுவர்களும் ஆழமான பகுதி எனத் தெரியாமல் நீரில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் பார்த்த பன்னீர்செல்வம் நீரில் மூழ்கும் சிறுவர்களைக் காப்பாற்ற அவரும் நீரில் குதித்திருக்கிறார். நீரில் குதித்த பன்னீர்செல்வம் நீச்சல் தெரியாத நிலையில் நால்வருமே நீரில் மூழ்கியுள்ளனர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் ஓடி வந்து நீரில் மூழ்கியவர்களை மீட்டுள்ளனர். நால்வரில், 7 வயது சிறுவன் ருத்ரன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

கண்மாய்
கண்மாய்
பைல் படம்

நால்வரையும் பெரியகுளம் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுவன் ருத்ரன் மூச்சுத்திணறலுடன் இருந்திருக்கிறார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர்.

சிறுவன் பலி
சிறுவன் பலி

மேலும் கண்மாயின் நீரில் மூழ்கி பலியான சபரிவாசன், மணிமாறன், பன்னீர்செல்வம் ஆகிய மூவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் பலியான சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருவிழாவுக்கு வந்த இடத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism