Published:Updated:

கடைக்குச் சென்ற குடும்பம்; கட்டுப்பாட்டை இழந்த கார்- குலசேகரம் அருகே சோகத்தை ஏற்படுத்திய விபத்து!

சானலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்
சானலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்

கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமுள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதில் அனிஷ், அவரின் மனைவி மற்றும் குழந்தை என மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் (30). மார்பிள் போடுவது மற்றும் தேன் பெட்டி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது வீடு பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் வெளியேறிச் செல்லும் கால்வாய்க் கரையில் அமைந்துள்ளது. இவருக்கு மஞ்சு (27) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் அமர்நாத் என்ற குழந்தையும் இருந்தனர்.

அனிஷ்
அனிஷ்

அனிஷ் மனைவி மற்றும் குழந்தையுடன் கடையில் பொருள்கள் வாங்குவதற்காக இன்று காரில் சென்றார். பொருள்கள் வாங்கிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமுள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதில் அனிஷ், அவரின் மனைவி மற்றும் குழந்தை என மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

சம்பவம் குறித்த தகவலின் பேரில் குலசேகரம் போலீஸார் அங்கு சென்று மூன்றுபேரின் உடலை மீட்டனர். பின்னர் அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து காரை மீட்கும் முயற்சியில் போலீஸார் இறங்கினர்.

கடைக்குச் சென்ற குடும்பம்; கட்டுப்பாட்டை இழந்த கார்- குலசேகரம் அருகே சோகத்தை ஏற்படுத்திய விபத்து!

இந்தச் சம்பவம் குறித்து தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் ஒரு குடும்பமே பலியான சம்பவம் குமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு