Published:Updated:

மோதிய இருசக்கர வாகனங்கள் -பெரம்பலூர் பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு; சிவகங்கையில் சோகம்

அகிலா
அகிலா

சான்றிதழைப் பெற்றுக்கொண்டு திரும்பியபோது எதிரே ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் என்பவர் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தில் காயமடைந்தார்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு உலகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை இருக்கும் என்ற ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்துள்ளது மத்திய அரசு. இந்த நிலையில், மக்களுக்காகக் கூடுதல் பணிகளைப் பார்த்துவரும் காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றனர்.

கொரோனோ சிகிச்சை
கொரோனோ சிகிச்சை

இந்த நிலையில், கொரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படித்துவந்தார் அகிலா (23) இவரது சொந்த ஊர் பெரம்பலூர்.

டெய்லராக இருந்த இவரின் தந்தைக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் மருத்துவம் படித்துள்ளார் அகிலா. எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த அகிலா பயிற்சி மருத்துவராக சிவகங்கை மருத்துவமனையில் பணி செய்து வந்தார்.

அகிலா
அகிலா

கடந்த மார்ச் 28-ம் தேதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க, மேலும் ஒரு மாதம் அவரது பணியை நிர்வாகம் நீடித்துள்ள நிலையில், கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றைப் பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரும், அவரின் நண்பரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

சான்றிதழைப் பெற்றுக்கொண்டு திரும்பியபோது எதிரே ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் என்பவர் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தில் காயமடைந்தார். அகிலாவும், அவரின் நண்பரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அகிலா இன்று இறந்தார்.

log down
log down

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அகிலா மருத்துவராகி மக்களுக்கு மருத்துவம் சார்ந்து உதவி செய்ய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட அவரின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு