Published:Updated:

`கலெக்டராக ஆசைப்பட்டவளுக்கு, கலெக்டரே மாலை போடுறாரே..!’ - திருச்சி விபத்தின் கண்ணீர்க் காட்சிகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகளை வருவாய் துறை மற்றும் வேளாண் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் கண்டறிந்து தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Yamuna father
Yamuna father

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.புதூரில் அங்காளம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதற்காக கடந்த 18 -ம் தேதி திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்த குணசீலன் மற்றும் அவரது மனைவி எழிலரசி ஆகியோர், தங்களது உறவினர்களை அழைத்துக் கொண்டு மினி லாரியில் கிளம்பினர். pjU

Mini lorry accident deaths
Mini lorry accident deaths

ஓய்வுபெற்ற சிறைத்துறைப் பணியாளரான குணசீலன், தனது மகன் சதீஷ்குமாருக்கு எஸ்.என்.புதூரில் பெண் எடுத்துள்ளதால், சம்பந்தி ஊரில் நடக்கும் விழா என்பதால் உறவினர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.

அவர்கள் சென்ற வாகனத்தை இளையராஜா என்கிற நபர் ஓட்ட, 18 பேர் அமர்ந்திருந்த வாகனம் துறையூரை அடுத்த திருமனூர் - எரகுடி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரில் வந்த தனியார் பேருந்து மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் வேகமாக வண்டியைத் திருப்பவே, சாலையோரம் இருந்த 100 அடி ஆழக் கிணற்றில் பாய்ந்து விழுந்தது மினி லாரி.

Vikatan

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட 19 பேர் கிணற்றுக்குள் விழுந்ததால், எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், மேலும் 11 பேரை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

கிணற்றில் தண்ணீர் இல்லாததாலும், சேறும் சகதியுமாக குணசீலன், அவரது மனைவி எழிலரசி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அந்த வாகனத்தில் எழிலரசியின் தம்பி இளங்கோவன், தனது மனைவி முத்துக்கண்ணு, மற்றும் அவரின் குழந்தைகளான யமுனா மற்றும் சரத்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Rescue operation
Rescue operation

விபத்தில் படுகாயமடைந்த இளங்கோவன் மற்றும் அவரது மனைவி முத்துக்கண்ணு, மகள் லாவண்யா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதிச் சடங்குக்கு ஆம்புலன்சில் அழைத்து வரும் வரை யமுனாவும், சரத்குமாரும் இறந்து போனது அவர்களுக்கு தெரியாது. இளங்கோவனின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பிள்ளைகளின் உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

அப்போது இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் சகிதமாக அஞ்சலி செலுத்தியதுடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது யமுனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் மாவட்ட கலெக்டர். இதைப் பார்த்த உறவினர்கள், `கலெக்டருக்குப் படிக்கணும்னு அடிக்கடி சொல்வாள். ஆனால் அவள் செத்து அவளுடைய உடலுக்கு கலெக்டர் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார்' எனக் கதறி அழுதனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகளை வருவாய் துறை மற்றும் வேளாண் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் கண்டறிந்து தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் குரல்

இதேபோல் விபத்தில் பலியான ஆசிரியையான கோமதி இறந்துபோன குணசீலனின் மகள். இறந்துபோன குமாரத்தி குணசீலனின் தம்பியின் மனைவி. ஆசிரியை கோமதி தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், தந்தையின் அழைப்பை ஏற்று குழந்தைகளுடன் கோயிலுக்குச் சென்றார். இந்நிலையில் விபத்தில் சிக்கி கோமதி பலியான நிலையில், அவரது குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தாய் கோமதி இறந்து போனது அவரது பிள்ளைகளுக்குத் தெரியாது.

இதேபோல் கட்டப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த கயல்விழி என்பவர் சிறுநாவலூர் புதூர் கோயிலுக்குச் சென்றனர். வீடு திரும்புவதற்கு பேருந்து வசதி இல்லாத நிலையில், அவரின் குழந்தைகளான ஹரிஷ், சஞ்சனா ஆகியோருடன் மினி லாரியில் லிஃப்ட் கேட்டு வந்துள்ளார். இந்த விபத்தில் கயல்விழியும் அவரது மகள் சஞ்சனாவும் பலியாகி இருக்கும் நிலையில், விபத்தில் படுகாயமடைந்த கயல்விழியின் மகன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

accident deaths
accident deaths

இறந்தவர்களின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதுடன், படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் விபத்துக்குக் காரணமான கிணற்றுக்கு அருகே தடுப்புச் சுவர் கட்டுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. ஆனால் தரைமட்ட திறந்தவெளிக் கிணறுகளுக்குப் பாதுகாப்புச் சுவர், வேலி அமைத்திட தமிழக அரசு உத்தரவு போட்டது என்றும், அந்த உத்தரவை மதிக்காததால் இதுபோன்ற கோர விபத்துகள் தொடர்கின்றன. அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்.

மேலும் கடந்த காலங்களில் விவசாயம் மற்றும் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக ஆதாரமாக விளங்கிய கிணறுகள் தமிழகத்தில் பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடைக்கின்றன.

K.N.Nehru
K.N.Nehru

ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகளை வருவாய் துறை மற்றும் வேளாண் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் கண்டறிந்து தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகத் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

8பேர் பலியான பிறகாவது அரசின் காதுகளில் இவர்களின் கதறல் கேட்குமா..?