Published:Updated:

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து குழந்தை, தாய் பலி - குழந்தைக்கு சோறூட்டும்போது நடந்த பரிதாபம்

வீட்டைக் கட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களின் தாமதம் அவர்களின் குடும்பத்தைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மழையில் ஈரமான மண் சுவர் இடிந்து விழுந்ததில் தாயும் 11 மாதக் குழந்தையும் தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இடிந்து விழுந்த வீடு
இடிந்து விழுந்த வீடு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரின் மனைவி நித்யா. இந்தத் தம்பதிக்கு கமலேஷ் என்கிற மகனும், பவ்யஸ்ரீ என்ற 11 மாத கைக்குழந்தையும் உள்ளனர். சக்திவேல் திருச்சியிலுள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்துவருகிறார். இவர்கள் வசித்த வீடு பழைய காலத்து ஓட்டு வீடு. கடந்த இரண்டு நாள்களாகத் தொடர் மழையில் சுவர் ஈரமாக இருந்ததால் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், நேற்று இரவு 8:30 மணிக்கு, வீட்டின் முன்பு நின்றுகொண்டு தனது குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்ததில் 11 மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.

இடிந்து விழுந்த வீடு
இடிந்து விழுந்த வீடு

தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த தாய் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்கள் தரப்பில் பேசினோம்.``சக்திவேல்- நித்தியாவுக்குக் கடந்த ஆறு வருடங்களுக்கு முனபுதான் கல்யாணம் நடந்தது. திருச்சியிலுள்ள தனியார் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்த அவர் ரொம்ப சிரம்பட்டுத்தான் குடும்பத்தை நடத்திக்கிட்டு வர்றாரு. திருச்சியில் கடந்த வாரம் முதலே ஒரு நாள்விட்டு ஒரு நாள் நல்ல மழை பெய்துக்கிட்டு இருக்கு.

திருச்சி: 550 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது!

இவங்க வீடு மண்சுவரால் ஆன பழைய காலத்து கட்டடம். பல இடங்களில் விரிசலும் இருந்தது. நேற்று இரவு அவரது குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்ததில், குழந்தை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. வீட்டைக் கட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள். அவர்களது தாமதம், அலட்சியத்தால் குடும்பமே துயரத்தில் நிற்கிறது" என்று தழுதழுத்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு