Published:Updated:

பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள்மீது மோதிய லாரி - 6 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

விபத்து ஏற்படுத்திய லாரி ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள்மீது மோதிய லாரி - 6 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
விபத்து ஏற்படுத்திய லாரி ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் நேற்று சுமார் 20 பேர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, சரக்கு லாரி ஒன்று சாலைச் சந்திப்பில் வேகமாக வந்ததாகத் தெரிகிறது. எதிர்பாராதவிதமாக பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் மரணமடைந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. விபத்தைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் லாரியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் பதற்றத்துடன் ஓடியதை மக்களில் சிலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

லாரி பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநரைத் தேடும் பணியும் நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நரேந்திர குமார் சூர்யவன்ஷி, "விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் எட்டுப் பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரைக் கைதுசெய்ய காவல்துறை தேடிவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.