Published:Updated:

பம்புசெட்டில் குளிக்கச் சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி! - விருதுநகர் அருகே சோகம்

பலியானவர்

பட்டாசு தொழிலாளர்கள் இருவர் பம்புசெட்டில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாரதவிதமாக மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.

பம்புசெட்டில் குளிக்கச் சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி! - விருதுநகர் அருகே சோகம்

பட்டாசு தொழிலாளர்கள் இருவர் பம்புசெட்டில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாரதவிதமாக மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.

Published:Updated:
பலியானவர்

விருதுநகர் அருகே சதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(42). அப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி(50). இவரும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் முனியசாமி, சீனிவாசன் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் பம்புசெட்டில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி பட்டாசு தொழிலாளிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீஸார், விரைந்து வந்து மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்
பலியானவர்

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்துகையில், மோகன்ராஜ் தன்னுடைய தோட்டத்தில் இளநீர் மற்றும் மாங்காய்களை யாரும் திருடிவிடக்கூடாது என்பதற்காக விதிகளை மீறி சட்டவிரோதமாக தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், முனியசாமியும், சீனிவாசனும் பம்புசெட்டில் குளிப்பதற்காக மோகன்ராஜ் தோட்டத்திற்குள் நுழைந்தபோது கீழேக்கிடந்த மின்வேலியில் சிக்கியதால் இருவரின் மீதும் மின்சாரம் பாய்ந்து பலியானது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்தது தொடர்பான புகாரின்பேரில் வச்சக்காரப்பட்டி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விதிகளை மீறி சட்டவிரோதமாக தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்த மோகன்ராஜ் மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் சம்பவம் குறித்து தகவலறிந்த மோகன்ராஜ் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான மோகன்ராஜை போலீஸார் தேடி வருகின்றனர். மின்வேலியில் சிக்கி பட்டாசு தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.