Published:Updated:

கொரோனா ஊரடங்கு உத்தரவு - சொந்த ஊருக்கு டூவீலரில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம் ( நா.ராஜமுருகன் )

அவர்களோடு சேர்த்து 6 பேர், 2 மோட்டார் சைக்கிளில் 144 தடை உத்தரவு காரணமாக, ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். கரூர் டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரூர் அமராவதி ஆற்றுப்பால நடைமேடையில் மோட்டார் சைக்கிள் மோதியதில், நாகராஜன், சரவணன் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தமிழக அரசு அறிவித்துள்ள விடுமுறையைத் தொடர்ந்து, சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பிய இளைஞர்களில் இருவர், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலம் அருகே உள்ள நடைபாதை மீது மோதி, சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பைக்குகளில் ஊர் திரும்புபவர்கள்...
பைக்குகளில் ஊர் திரும்புபவர்கள்...
நா.ராஜமுருகன்

கொரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலகையும் திகிலில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலும் அது பரவ, அதைத் தேசிய பேரிடராக இந்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு, வரும் 31-ம் தேதி வரை சுய ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு எல்லா மாவட்ட எல்லைகளையும் சீல் வைத்து, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மக்கள் பயணிக்க தடை விதித்துள்ளது.

Vikatan

இதனால், சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் பணிபுரிந்து வந்த பலரும் சொந்த ஊருக்கு நேற்று இரவில் இருந்து திரும்பி வருகிறார்கள். அந்த வகையில், திருப்பூர் மற்றும் ஓசூர் பகுதியில் பணியாற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று இரவு முதலே கரூர் டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனங்களில் அதிகளவில் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளித்துள்ளதாகவும், 144 உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவசர அவசரமாகப் பேருந்தில் இடம் இல்லாததால், இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்
நா.ராஜமுருகன்

அப்படி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜன் (25). சரவணன் (22). இவர்கள் இருவரும் ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களோடு சேர்த்து 6 பேர், 2 மோட்டார் சைக்கிளில் 144 தடை உத்தரவு காரணமாக, ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். கரூர் டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரூர் அமராவதி ஆற்றுப்பால நடைமேடையில் மோட்டார் சைக்கிள் மோதியதில், நாகராஜன், சரவணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்தி, கரூர் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, திருப்பூரில் இருந்து கரூர் வழியாக காட்டுமன்னார்கோவில் திரும்பிக்கொண்டிருந்த அரசுப் பேருந்து, கரூர் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புலியூர் செட்டிநாடு சிமென்ட் தொழிற்சாலை அருகே மற்றொரு பேருந்தை முந்திச் சென்றபோது, எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் பின்பக்கம் புளியமரத்தின் மீது உரசியது.

கரூர் அரசு மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவமனை
நா.ராஜமுருகன்

இந்த விபத்தில், அரியலூர் மாவட்டம், கொல்லங்குடி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, திருப்பூரிலிருந்து 144 தடை உத்தரவால் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு திரும்பிக்கொண்டு இருந்தார். பேருந்துகள் உரசிக்கொண்ட விபத்தில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அடுத்த கட்டுரைக்கு