Published:Updated:

தூத்துக்குடி: மதுபோதையில் தண்டவாளத்தில் உறக்கம் - மோதிய சரக்கு ரயில்; உடல் நசுங்கி 2 பேர் பலி!

இருவர் பலியான ரயில்வே ட்ராக்

தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்களில் இரண்டு பேர் சரக்கு ரயில் மோதி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

தூத்துக்குடி: மதுபோதையில் தண்டவாளத்தில் உறக்கம் - மோதிய சரக்கு ரயில்; உடல் நசுங்கி 2 பேர் பலி!

தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்களில் இரண்டு பேர் சரக்கு ரயில் மோதி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

Published:Updated:
இருவர் பலியான ரயில்வே ட்ராக்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்தவர் ஜெபசிங். இவர், தூத்துக்குடியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கிறார். அங்கு தூத்துக்குடி, திரு.வி.க நகரைச் சேர்ந்த மாரிமுத்து, பசும்பொன் நகரைச் சேர்ந்த மற்றொரு மாரிமுத்து ஆகிய தனது நண்பர்களைச் சந்தித்திருக்கிறார். மாலையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், 3-வது மைல் ரயில்வே பாலத்தின் கீழ்ப் பகுதியில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து மீளவிட்டான் செல்லும் ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து மூவரும் மது அருந்தியிருக்கின்றனர்.

உயிரிழந்த இருவர்
உயிரிழந்த இருவர்

மதுபோதை தலைக்கு ஏறியதும் மூன்று பேரும் ரயில்வே ட்ராக்கிலேயே அயர்ந்து படுத்துத் தூங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திர மாநிலம் நூஸ்வித் ரயில் நிலையம் நோக்கி, ஒரு சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில், ரயில்வே ட்ராக்கில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த மூன்று பேர் மீதும் மோதியது. இதில், ட்ராக்கில் குறுக்காகப் படுத்திருந்த இரு மாரிமுத்துக்களும் உயிரிழந்தனர். இதில், ஒருவரின் தலை துண்டானது. நீளவாக்கில் படுத்திருந்த ஜெபசிங் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து சரக்கு ரயில் சென்றதும் சுதாரித்துக்கொண்ட ஜெபசிங் உடலில் ஏற்பட்ட காயங்களுடன் அருகிலுள்ள தெருவுக்குச் சென்று நண்பர்கள் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். “கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி முடிஞ்சதுமே நாங்க மூணு பேரும் சேர்ந்து பக்கத்துல இருக்குற ட்ராக்குல உட்கார்ந்து மது அருந்தினோம். ரொம்ப நாள் கழிச்சு மூணு பேரும் சந்திச்சதுனால கொஞ்சம் ஓவராகிடுச்சு. அப்படியே ட்ராக்கிலேயே படுத்துத் தூங்கிட்டோம். இது சரக்கு ரயில் போகுற ட்ராக். ரயில் பெரும்பாலும் வராதுன்னுதான் அவங்க சொன்னாங்க.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெபசிங்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெபசிங்

அவங்க ரெண்டு பேரும் உள்ளூர்க்காரங்க. ரயில் எப்போ வரும், போகும்னு அவங்களுக்குத்தானே தெரியும்னு அவங்க சொன்னதை நம்பி நானும் ட்ராக்குலயே படுத்துட்டேன். நான் நீட்டுவாக்குல படுத்ததுனால தப்பிச்சுட்டேன். அவங்க ரெண்டு பேரும் தண்டவாளத்துல தலை சாய்ச்சபடியே குறுக்குவாக்குல படுத்தாங்க. ரயில் வரும்னு நினைக்கலை. போதை அதிகமா ஏறுனதுனால ரயில் ஹாரன் சத்தம் காதுல விழலை. ரயில் இன்ஜினின் வெளிச்சத்தையும் உணர முடியலை. கட கடன்னு வேகமா ரயில் கடந்து போகுறபோதுதான் ரயில் போகுறதை லேசா உணர முடிஞ்சுது” என போலீஸில் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அமைதியான அதிகாலை நேரத்தில் ரயிலின் ஹாரன் சத்தத்தைக்கூட கேட்டு உணர முடியாமல் மூவரும் படுத்திருந்தனர் என்றால், மதுவுடன் சேர்த்து கஞ்சா புகைத்திருக்கலாம். அதனால்தான் அவர்களால் எழுந்திருக்க முடியாமல்போயிருக்கிறது” எனவும் போலீஸார் சந்தேகத்துடன் கூறுகிறார்கள். திரு.வி.க நகரைச் சேர்ந்த மாரிமுத்து, கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்.

இருவர் பலியான ரயில்வே ட்ராக்
இருவர் பலியான ரயில்வே ட்ராக்

அவர், குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். மற்றொரு மாரிமுத்து மீது வழிப்பறிக் கொள்ளை வழக்குகள் உள்ளன. இவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியே வந்திருக்கிறார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெபசிங்கும் ஒரு கொலை வழக்கில் கைதாகி மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ரயில்வே ட்ராக்கில் ரயில் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism