Published:Updated:

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 2 மாணவிகள் பலி! - ஆலங்குடியில் சோகம்

மின்சாரம் தாக்கி 2 மாணவிகள் பலி
News
மின்சாரம் தாக்கி 2 மாணவிகள் பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இரண்டு பேர் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி டிவிஎஸ் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகள் சுவேதா (13). ஆலங்குடியிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்துவந்தார். தற்போது, கொரோனா காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், வழக்கம்போல் தனது வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்று விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அங்கு தாழ்வாகச் சென்ற மின்கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து சுவேதா தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

மின்சாரம்
மின்சாரம்

படுகாயமடைந்த சுவேதா, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், ஆலங்குடி அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் என்பவரின் மகள் அஞ்சலி (16). ஆலங்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது, வீட்டின் வாசலிலிருந்த எர்த் கம்பியிலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். புதுக்கோட்டையில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மின்சாரம் தாக்கி மாணவிகள் பலி
மின்சாரம் தாக்கி மாணவிகள் பலி

தற்போது விடுமுறை தினம் என்பதால், பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுமையாக வீட்டிலேயே இருக்கின்றனர். தற்போது, பருவமழை சீஸன் என்பதால், மின்சாதனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்றும், மின்கம்பிகள், மின்சாதனங்களுக்கு அருகே பிள்ளைகளைச் செல்ல விடாமல் கவனிக்க வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.