Published:Updated:

திருவிழாவில் மின்தடை; விடிய விடிய இயங்கிய ஜெனரேட்டர்! - மூச்சுத்திணறி இருவர் பலி! - என்ன நடந்தது?

ஊட்டி அரசு மருத்துவமனை
ஊட்டி அரசு மருத்துவமனை

ஊட்டியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் ஏற்பட்ட மின்தடை காரணமாக இயக்கப்பட்ட ஜெனரேட்டர் புகையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள சோலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தட்டனேரி, ஒசஹட்டி, பிக்ககண்டி, ஊரட்டி, கோட்டட்டி, பேக்கடை ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒசகேரி என்ற இடத்திலுள்ள சிவன் கோயிலில் திருவிழா நடத்தினர். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் மழை காரணமாக நேற்று இரவு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்துக்காக ஜெனரேட்டரை இரவு முழுக்க பயன்டுத்தியுள்ளனர்.

சுபாஷ், மூர்த்தி
சுபாஷ், மூர்த்தி

ஜெனரேட்டர் இயக்கப்பட்ட அறையில் ஐந்து ஆண்கள் தங்கியிருந்திருக்கிறார்கள். இன்று காலை ஊர் மக்கள் சிலர் சென்று பார்த்தபோது, அந்த ஐந்து பேரும் மயங்கியநிலையில் கிடந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு ஊட்டியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சுபாஷ், மூர்த்தி இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகவும், மற்ற மூவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உறுதி செய்தார்கள். அந்த மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

நீலகிரி: இடைவிடாத மழை; முகாம்களுக்கு மாற்றப்படும் மக்கள்! - தேசியப் பேரிடர் மீட்புப் படை வருகை

இந்தத் துயர சம்பவம் குறித்து விசாரித்துவரும் காவல்துறையினர், ``இவர்கள் தங்கியிருந்த அறையில் விடிய விடிய ஜெனரேட்டரை இயக்கியிருக்கிறார்கள். இரவு முழுக்க ஜெனரேட்டர் ஓடிய நிலையில், அறை முழுக்கப் புகை பரவியிருக்கிறது.

ஊட்டி அரசு மருத்துவமனை
ஊட்டி அரசு மருத்துவமனை

அந்த அறையில் தங்கியிருந்த அஜித்குமார் (25), ரதீஷ் (21), விக்னேஷ் (27), சுபாஷ் (36), மூர்த்தி (49) ஆகிய ஐந்து பேரில் சுபாஷ், மூர்த்தி இருவரும் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு