Published:Updated:

கள்ளக்குறிச்சி: கட்டுப்பாட்டை இழந்த கார்; சிறுமி, தனித்துணை ஆட்சியர் உயிரிழப்பு... 4 பேர் படுகாயம்!

விபத்துக்குள்ளான கார், தனித்துணை ஆட்சியர்

சங்கராபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தனித்துணை ஆட்சியரும், ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி: கட்டுப்பாட்டை இழந்த கார்; சிறுமி, தனித்துணை ஆட்சியர் உயிரிழப்பு... 4 பேர் படுகாயம்!

சங்கராபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தனித்துணை ஆட்சியரும், ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
விபத்துக்குள்ளான கார், தனித்துணை ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராகப் பதவி வகித்துவந்தவர் ராஜாமணி. இவர், இன்று காலை சங்கராபுரம் அருகே நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு, அப்படியே அரசு வேலைகளைத் தொடரும் வகையில் சென்றதாகக் கூறப்படுகிறது. சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவர் பயணித்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

உயிரிழந்த தனித்துணை ஆட்சியர்
உயிரிழந்த தனித்துணை ஆட்சியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது, எதிரே இருந்த மூன்று இரு சக்கர வாகனங்களில் மோதியதாகக் கூறப்படும் அந்த கார், தொடர்ந்து மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது. இந்த கோர விபத்தில், தனித்துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் சென்ற ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கும்... சாலை ஓரமாக நடந்து சென்ற பெண் குழந்தை உட்பட இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேரையும் மீட்ட அந்தப் பகுதி மக்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இவர்களில், 11 வயதான சிறுமி மருத்துவமனைக்குச் சென்றதுமே உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

மேலும், தனித்துணை ஆட்சியரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த சங்கராபுரம் போலீஸார், விபத்துக்கான காரணம் என்ன, விபத்து எப்படி ஏற்பட்டது உள்ளிட்ட பல்வேறு சந்தேக கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தக் கோர விபத்து அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism