Published:Updated:

தொடர் மழை; பயன்பாடற்ற சத்துணவுக் கட்டடம் - தேனி பள்ளி மாணவர்களைப் பதறவைத்த விபத்து!

இடிந்து விழுந்த கட்டடம்
இடிந்து விழுந்த கட்டடம்

தொடர் மழை காரணமாக, பள்ளி வளாகத்திற்கு உள்ள, பயன்பாடற்ற பழைய சத்துணவுக் கட்டடம் ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்துவிழுந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி அருகே பழைய சத்துணவுக் கட்டடம் இடிந்து விழுந்ததில், அருகில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு அருகே உள்ளது பொன்னன்படுகை கிராமம். இங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 100 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.

பள்ளி
பள்ளி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு அருகே உள்ளது பொன்னன்படுகை கிராமம். இங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 100 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, பள்ளி வளாகத்திற்கு உள்ள, பயன்பாடற்ற பழைய சத்துணவுக் கட்டடம் ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்துவிழுந்தது. அருகே விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களின் மீது, கட்டடப் பாகங்கள் விழுந்தன.

Vikatan
காயம்பட்ட மாணவனைத் தூக்கிச் செல்லும் கிராமத்தினர்
காயம்பட்ட மாணவனைத் தூக்கிச் செல்லும் கிராமத்தினர்

இதில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் செல்வக்குமார், ஏழாம் வகுப்பு படிக்கும் ஈஸ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டுவந்த ஆசிரியர்கள், கிராமத்தினர் உதவியுடன், மாணவர்களை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், செல்வக்குமாருக்குக் கால் மற்றும் வலது கையில் பலமான காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இடிந்து விழுந்த கட்டடம்
இடிந்து விழுந்த கட்டடம்

ஈஸ்வரனுக்குத் தலை மற்றும் உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர், கானாவிலக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். பழைய கட்டடத்தை இடிக்காமல் வைக்க என்ன காரணம் எனக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய கலெக்டர். ``மழைக்காலத்திற்கு முன்னரே பழைய கட்டடங்களைக் கணக்கெடுக்கும் பணி நடந்தது. தொடர்ந்து அவற்றை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. மழை காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது வருத்தமளிக்கிறது” என்றார்.

`பள்ளிக் குழந்தைகளா ஆணவக்கொலைகளைச் செய்கிறார்கள்?' - காட்டமாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

பயன்பாடற்ற சத்துணவுக் கட்டடம் மட்டுமல்லாமல், பள்ளியில் பல இடங்களில், கட்டடங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், இதைக் கல்வித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர் கிராம மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு