Published:Updated:

100 கி.மீ வேகத்தில் வந்த ரயில்; சறுக்கிய இரு சக்கர வாகனம்! - நொடிப்பொழுதில் உயிர் தப்பிய வாலிபர்

உயிர் தப்பிய வாலிபர்

மும்பையில் தண்டவாளத்தைக் கடந்தபோது 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி இரு சக்கர வாகனம் சுக்கு நூறானது.

100 கி.மீ வேகத்தில் வந்த ரயில்; சறுக்கிய இரு சக்கர வாகனம்! - நொடிப்பொழுதில் உயிர் தப்பிய வாலிபர்

மும்பையில் தண்டவாளத்தைக் கடந்தபோது 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி இரு சக்கர வாகனம் சுக்கு நூறானது.

Published:Updated:
உயிர் தப்பிய வாலிபர்

மும்பையில் ரஞ்சித் தேஷ்பாண்டே என்பவர் ரயில் தண்டவாளத்தில் இருந்த லெவல் கிராஸிங்கை தனது இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றார். ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் ரயில்வே கேட்டுக்கு அடிப்பகுதி வழியாக ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர். ரஞ்சித்தும் அதே போன்று ரயில் தண்டவாளத்தை தனது இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றார். அதேநேரம் வெகு அருகில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்தது. இரு சக்கர வாகனத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் தண்டவாளத்துக்கு அருகில் இரு சக்கர வாகனம் சறுக்கி கீழே விழுந்தது. ரயில் பக்கத்தில் வந்துவிட்டது. உடனே உயிர் தப்பினால் போதும் என்று அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இரு சக்கர வாகனம் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் கிடந்தது. வேகமாக வந்த ரயிலின் அதிர்வால் இரு சக்கர வாகனம் ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது. எப்படியோ உயிர் பிழைத்தோம் என்று நினைத்து இரு சக்கர வாகனத்தின் எஞ்சிய மிச்சம் மீதிப் பகுதிகளை மட்டும் ரஞ்சித் சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்றார். இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்திருக்கும்பட்சத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். எனவே ரயில்வே போலீஸார் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவிவருகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் சில நிமிடங்களைச் சேமிக்க இது போன்று உயிரோடு விளையாடக் கூடாது என அதிகாரிகளும், வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!