Published:Updated:

பேச்சுவார்த்தை இல்லை... அலறிய சிறுவன்; காப்பாற்றச் சென்ற மாமா - தேர் விபத்தில் இருவரும் பலியான சோகம்

தஞ்சாவூர் தேர் விபத்து ( ம.அரவிந்த் )

களிமேட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் சிறுவன் ராஜ்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து தேரை இழுத்துச் சென்றிருக்கிறான். கொஞ்ச தூரத்தில் மாமா சாமிநாதனும் சென்றிருக்கிறார். இதற்கிடையே...

பேச்சுவார்த்தை இல்லை... அலறிய சிறுவன்; காப்பாற்றச் சென்ற மாமா - தேர் விபத்தில் இருவரும் பலியான சோகம்

களிமேட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் சிறுவன் ராஜ்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து தேரை இழுத்துச் சென்றிருக்கிறான். கொஞ்ச தூரத்தில் மாமா சாமிநாதனும் சென்றிருக்கிறார். இதற்கிடையே...

Published:Updated:
தஞ்சாவூர் தேர் விபத்து ( ம.அரவிந்த் )

உறவுகளுக்குள் என்னதான் பிரச்னை ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் போனாலும், ஆபத்து என்று வரும்போது கைகொடுக்க வந்து நிற்பார்கள். தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் சிறுவன் ஒருவன் சிக்கிக்கொள்ள, அருகில் இருந்த உறவினரைப் பார்த்து, அலறியிருக்கிறான். ஒரு அடி இடப் பிரச்னைக்காக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அக்குடும்பத்தினருடன் பேசாமல் இருந்த சிறுவனின் மாமா, சிறுவனைக் காப்பாற்றச் சென்றிருக்கிறார். இதில் இருவருமே உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பலியான சாமிநாதன்
பலியான சாமிநாதன்

தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஒரே ஊரில், ஒரே நேரத்தில் 11 பேர் இறந்ததால் அந்தக் கிராமம் முழுவதும் இப்போதும் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

களிமேடு கீழத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (42). விவசாயியான இவருக்குத் திருமணமாகி, ராஜ்குமார் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரின் சொந்தத் தாய் மாமன் சாமிநாதன் (56). இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்துவருகின்றனர். சாமிநாதனுக்கும் முருகேசனுக்கும் தங்கள் இரு வீட்டுக்கு நடுவே உள்ள பாதை தொடர்பாக இடப் பிரச்னை இருந்திருக்கிறது.

சிறுவன் ராஜ்குமார்
சிறுவன் ராஜ்குமார்

ஒரு அடி அளவிலான இடம் இரு குடும்பத்துக்குள்ளும் பேச்சுவார்த்தையே இல்லாத அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. மேலும், அடிக்கடி இடம் தொடர்பாக இரண்டு குடும்பமும் சண்டைபோட்டு வந்துள்ளனர். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் இந்தப் பிரச்னை நீடித்துவந்திருக்கிறது. இந்தப் பிரச்னை காரணமாக, சிறுவன் ராஜ்குமார் முதற்கொண்டு இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பேசிக்கொள்வதில்லையாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் களிமேட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் சிறுவன் ராஜ்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து தேரை இழுத்துச் சென்றிருக்கிறான். கொஞ்ச தூரத்தில் மாமா சாமிநாதனும் சென்றிருக்கிறார். இதற்கிடையே மின்சாரம் தாக்கிய நிலையில் பலர் தூக்கி வீசப்பட்டனர். கரன்ட் ஷாக்கைத் தாங்க முடியாத ராஜ்குமாரும் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அப்போது, சாமிநாதனைப் பார்த்த சிறுவன், `மாமா...’ என்று அழைத்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்
தேர்

மேலும் அவர்கள், ``சாமிநாதனும் பதறியபடி சிறுவனைக் காப்பாற்றுவதற்கு ஓடிச் சென்றார். தேரை வரவேற்க ரோட்டுல தண்ணீர் ஊத்தியிருந்ததால மின்சாரம் ரோட்டுலயும் பாய்ந்திருந்துச்சு. ராஜ்குமாரைத் தூக்கப்போன சாமிநாதன் ரோட்டுல மின்சாரம் பாய்ந்த இடத்தில் கால்வெச்சதுமே தூக்கி வீசப்பட்டார்.

இதில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்’’ என்றனர். சாமிநாதன் விபத்து நடந்த இடத்தில் இல்லையென்றாலும், ராஜ்குமாரைக் காப்பாற்றச் சென்றபோது அவர் உயிரிழந்தது குறித்துச் சோகமாகப் பேசிக்கொள்கிறார்கள்,

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism