Published:Updated:

விபரீதத்தில் முடிந்த அம்பேத்கர் விழா ஏற்பாடு; மின்சாரம் தாக்கி விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் பலி!

மரணம்

திருவாரூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஏற்பாட்டின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விபரீதத்தில் முடிந்த அம்பேத்கர் விழா ஏற்பாடு; மின்சாரம் தாக்கி விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் பலி!

திருவாரூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஏற்பாட்டின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மரணம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம், அந்தக் கட்சியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் துறைத்தோப்பு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை இந்தப் பகுதியில் பிரமாண்ட ஃபிளெக்ஸ் பேனர்கள் வைக்கும் பணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அப்போது பேனரைச் சற்று உயரமாகத் தூக்கியிருக்கிறார்கள், அதில் எதிர்பாராதவிதமாக அந்த பேனர் மின்சாரக் கம்பியின் மீது உரசியிருக்கிறது. அதனால், அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த தில்லைவிளாகம் இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த சோட்டா என்கிற சின்னதுரை மீது மின்சாரம் தாக்கியிருக்கிறது.

சின்னதுரை
சின்னதுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் தூக்கி வீசப்பட்ட சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முத்துப்பேட்டை காவல்துறையினர், சின்னதுரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணை நடத்திவருகிறார்கள்.

மரணம்
மரணம்

மின்சாரம் தாக்கி பலியான சின்னதுரை 32 வயது நிறைவடைந்த இளைஞர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தை பாசறையின் ஒன்றிய துணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்திருக்கிறார். இவருக்கு ஓர் ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர் மனைவி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார்.

கட்சி நிகழ்ச்சிகளில் எப்போதும் மிகவும் ஆர்வத்துடன் பணியாற்றக்கூடிய சின்னதுரையின் இந்தப் பரிதாப மரணம் அந்தக் கட்சியினர் மற்றும் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தின்போது சின்னதுரையுடன் சேர்ந்து ஃபிளெக்ஸ் பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இதே பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளான, சபரிநாதன், புண்ணியமூர்த்தி, மனோஜ் உள்ளிட்ட நான்கு பேரும் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism