Published:Updated:

தொடரும் ஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பு... உண்மையான காரணம் என்ன?

ஃப்ரிட்ஜ் வெடிப்பு
News
ஃப்ரிட்ஜ் வெடிப்பு

பெரும்பாலான வீடுகளில் ஏ.சி இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் சமையலறையில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. ஏசி, ஃப்ரிட்ஜ் ஆகியவை வெடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அடிக்கடி நடக்கின்றன.

படுக்கை அறையில் இதமான குளிரும் பருகுவதற்கு குளிர்ந்த நீரும் நமக்கு எப்போதும் அலாதி சுகம். இப்படி மகிழ்வைக் கொடுக்கும் என நாம் வாங்கிப் பயன்படுத்தும் குளிர் சாதனப் பொருள்களே உயிருக்கு உலை வைக்க ஆரம்பித்துவிட்டால்?

தொலைக்காட்சி நிருபர் பிரசன்னா
தொலைக்காட்சி நிருபர் பிரசன்னா

சமீப காலங்களாக மின்பொருள்கள் வெடித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னை சேலையூர் சுந்தரம் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் பிரசன்னா. இவர் தனியார் செய்தித் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி அர்ச்சனா, ஆசிரியையாகப் பணியாற்றினார். பிரசன்னாவின் தாயாரும் இவர்களோடு வசித்துவந்தார். ஜூன் மாதம் 26-ம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், மின்கோளாறினால் வீட்டிலுள்ள ஃப்ரிட்ஜ் வெடித்ததில், மூவரும் மூச்சுத் திணறி மரணமடைந்ததாகச் செய்தி வெளியானது.

ஃப்ரிட்ஜ் வெடிப்பு
ஃப்ரிட்ஜ் வெடிப்பு

பிரசன்னா குடும்பத்தினர் இறந்துபோன வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் வெடித்துச் சிதறிக்கிடந்ததையும் அதிலிருந்து வெளிவந்த வாயுவினால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்ததையும் வைத்து, ‘ஃப்ரிட்ஜ் வெடித்ததுதான் பிரசன்னா குடும்பத்தினரின் உயிரிழப்புக்குக் காரணம்’ எனக் காவல்துறையும் உறுதிப்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை போரூர் அடுத்த சக்தி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் மேனன். இவர் குடும்பத்தினருடன் ஹாலில் தூங்கினார். அப்போது நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏ.சியின் சுவிட்ச்சை ஆப் செய்யாமல் ஒவ்வொருவரும் வெவ்வேறு அறைக்குச் சென்றனர். அதிகாலையில் மூச்சுத்திணறிய பிரகாஷ் மேனன் மற்றும் அவரின் குடும்பத்தினர் கண்விழித்தனர். அப்போது ஏ.சி. வெடித்து அந்த ஹால் முழுவதும் தீப்பிடித்திருந்தது. கடுமையாக போராடி ஒருவழியாக தீயை அணைந்தனர். இதனால் தீக்காயங்களுடன் அந்தக் குடும்பம் தப்பி பிழைத்திருக்கிறது.

ஃப்ரிட்ஜ் வெடிப்பு
ஃப்ரிட்ஜ் வெடிப்பு

அதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு போரூர் பகுதியில் மெடிக்கல் லேப் ஒன்று குளிர்சாதன பொருள் வெடிவிபத்தால் தீப்பற்றியது. இதில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்தன.

பெரும்பாலான வீடுகளில் ஏ.சி இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் சமையலறையில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. ஏசி, ஃப்ரிட்ஜ் ஆகியவை வெடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அடிக்கடி நடக்கின்றன. ஃப்ரிட்ஜில் உள்ள வாயு கசிந்து வீடு முழுவதும் பரவி தீ விபத்தை ஏற்படுத்திய சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

ஏ.சி. மற்றும் ப்ரிட்ஜ் வெடிப்பதற்கான காரணங்கள் குறித்து செங்கல்பட்டைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் ஷாஜகானிடம் பேசினோம். குளிர்சாதனப் பொருள்கள் வெடிப்பதற்கான காரணங்களையும் தவிர்ப்பதற்கான வாழிமுறைகளையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவர் நமக்கு கொடுத்த சில டிப்ஸ்கள் இவை…

ஷாஜகான் ஏ.சி. மெக்கானிக்
ஷாஜகான் ஏ.சி. மெக்கானிக்
பா.ஜெயவேல்
நவீன ரக மாடல்களாக வெளிவரும் ஏ.சி மற்றும் ஃப்ரிட்ஜ் ஆகியவற்றில் R-600A வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.

பழைய மாடல் குளிர்சாதனப் பொருள்களில், குளோரோ ஃபுளூரோ கார்பன் (CFC) என்று அழைக்கப்படும் ஃப்ரேயான் வாயு பயன்படுத்தப்பட்டது. குளிர்சாதனங்களிலிருந்து வெளியேறும் இந்த வாயு, ஓசோன் மண்டலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தற்போது குளிர்சாதனப் பொருள்களில் மாற்று வாயுவாக R-600A -ஐ பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது நவீன ரக மாடல்களாக வெளிவரும் ஏ.சி மற்றும் ஃப்ரிட்ஜ் ஆகியவற்றில் R-600A வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.

பழைய மாடல்களில் வாயுவின் அழுத்த அளவு 130 என்ற அளவிலேயே இருக்கும். நவீன மாடல்களில் வாயுவானது 230-லிருந்து 240 வரையிலான உயர் அழுத்தத்தில் அடைக்கப்பட்டிருக்கிறது. எனவே, கம்ப்ரஸரில் உள்ள கேஸ் குழாய்களில், அடைப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனே மின்சாதனங்கள் வெடித்து விடுகின்றன. பழைய மாடல்களில் உள்ள குழாய்களின் அளவையே புதிய மாடல் குளிர் சாதனங்களிலும் பயன்படுத்துகிறார்கள். வாயு அழுத்ததத்திற்கேற்ப கேஸ் குழாய் இருக்க வேண்டும். இவையெல்லாம் விபத்துக்கு முக்கியக் காரணங்களாகிவிடுகின்றன.

பழைய மாடல்களில் கேஸ் அடைப்பு ஏற்பட்டால், கம்ப்ரஸர் சூடாகி ட்ரிப் ஆகிவிடும். ஆனால், தற்போதைய மாடல்களில், குழாயின் எந்தப் பகுதி `வீக்’காக இருக்கிறதோ அந்த இடத்தில் வெடித்து தீப்பிடித்துவிடுகிறது.

கம்ப்ரஸரில் எவ்வளவு வாயு அடைக்க வேண்டும் என அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனம் பரிந்துரைக்கிறதோ அவ்வளவு வாயுதான் அடைக்க வேண்டும். குளிர்சாதனப் பொருள்களில், அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவையும் தாண்டி வாயுவை அடைப்பதுவும் விபத்துக்குக் காரணம். நவீன குளிர்சாதன பொருள்களில் வாயுவின் அழுத்தத்தின் அளவைவிட வாயுவின் எடை முக்கியமானது.

மின் சிக்கனத்துக்காக ஏ.சி, ஃப்ரிட்ஜ் ஆகியவற்றில் இன்வெர்ட்டர் மாடல்கள் வந்துவிட்டன. இந்த மாடல்களில் குறைந்த மின்சாரம் மட்டுமே தேவைப்படும். இவைதான் அதிக அளவில் வெடிக்கின்றன. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அந்தப் பொருள்களைப் பழுது பார்ப்பவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குளிர்சாதனப் பொருள்களை பழுதுபார்க்கும் சிலர், ஒரு சில மாதங்களே பயிற்சி பெற்று அவற்றை சர்வீஸ் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை. புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதும் இல்லை. ஏ.சி., ஃப்ரிட்ஜ் ஆகியவற்றைப் பழுதுபார்க்க வேண்டுமானால், நன்கு பயிற்சி பெற்றவர்களிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

மின்கசிவு ஏற்பட்டாலோ, மின்விநியோகம் சீரற்ற நிலையில் இருந்தாலோ மின்சாதனப் பொருள்கள் பழுதாகும் வாய்ப்பு அதிகம். ஆகவே, மின்விநியோகம் சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

இவற்றையெல்லாம் முறையாகக் கண்காணித்துக் கடைப்பிடித்து வந்தால், விபத்து ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்” என்கிறார்.

குடும்பத்தில் உள்ளவர்களின் மீது காட்டும் அக்கறையை இனி ஏ.சி.,ஃப்ரிட்ஜ்களின் மீதும் காட்ட வேண்டும்.