Published:Updated:

`திருமணமாகி மூன்றே நாளில் அவளோட வாழ்க்கை முடிந்துவிட்டதே!'‍- விபத்தில் மனைவியை இழந்த கணவன் கதறல்

லோகேஸ்வரன்.கோ

திருமணமாகி 3 நாள்களே ஆன நிலையில், ஏலகிரி மலையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய புதுமணத் தம்பதி விபத்தில் சிக்கினர். தன் கண் முன்னாலேயே உயிரிழந்த மனைவியின் சடலத்தை கட்டியணைத்து கணவன் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக வைத்தது.

மணிகண்டன் - திவ்யா
மணிகண்டன் - திவ்யா

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). எலெக்ட்ரீசியன் வேலை செய்யும் இவருக்கும், வாணியம்பாடியை அடுத்த புதூர் அண்ணா நகரைச் சேர்ந்த திவ்யா (24) என்பவருக்கும் கடந்த 1-ம் தேதி தான் திருமணம் நடைபெற்றது.

மணிகண்டன் - திவ்யா
மணிகண்டன் - திவ்யா

புதுமணத் தம்பதி நேற்று ஏலகிரி மலைக்கு பைக்கில் சுற்றுலா சென்றனர். மாலை நேரத்தில் மலை உச்சியிலிருந்து பைக்கில் கீழே இறங்கினர். 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது மலை அடிவாரத்திலிருந்து உச்சிக்கு மின்னல் வேகத்தில் நேர் எதிரே வந்த காரால் மணிகண்டன் தடுமாறினார். 

பைக்கை நிறுத்த முயன்றபோது தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. மணிகண்டனும், அவரின் மனைவி திவ்யாவும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அடுத்த சில நொடிகளில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் திவ்யா துடிதுடித்து உயிரிழந்தார்.

உயிரிழந்த திவ்யா
உயிரிழந்த திவ்யா

மணிகண்டன் ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்துவந்து மனைவியின் சடலத்தை கட்டிப்பிடித்துக் கதறி அழுதார். ``கல்யாணமாகி மூணு நாள்தான் ஆகுது; அதுக்குள்ள எங்க வாழ்க்கையே முடிஞ்சு போச்சே; உனக்குப் பதிலா அந்த ஆண்டவன் என் உயிரை பறிச்சிருக்கக் கூடாதா?’’ என்று கூறிக் கதறி அழுதார்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சுற்றுலாப் பயணிகளும் வருத்தப்பட்டு அழுதனர். தகவலறிந்த ஏலகிரி போலீஸார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து புதுப்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியில் உடலை பார்த்து கணவரின்
மனைவியில் உடலை பார்த்து கணவரின்

மனைவியின் உடலை விடாமல் மணிகண்டன் கதறி அழுதபடியே இருந்தார். பலர் ஆறுதல் கூறினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள். புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.