Published:Updated:

காட்டுத் தீயில் சிக்கிய கோலா கரடி! - தீரமாகக் காப்பாற்றிய துணிச்சல் பெண் #ViralVideo

தன் உயிரைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மிக துணிச்சலாகத் தீயில் சிக்கிய அந்த மிருகத்தை மீட்கும் காட்சி காண்போரை நெகிழச் செய்கிறது.

தோனி தோஹர்ட்டி
தோனி தோஹர்ட்டி ( Twitter )

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு இந்தக் காட்டுத் தீ பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழும் பாலுட்டி இனத்தைச் சேர்ந்த சிறப்பு விலங்கு 'கோலா'. பார்ப்பவர்களை ஈர்க்கும் இதில் ஒன்று, வேகமாகப் பரவி வரும் தீயில் சிக்கியுள்ளது. இதை அவ்வழியாகச் சென்ற ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இதயம் தொடும் அந்த வீடியோவில், பற்றி எரியும் தீயிலிருந்து தப்பிக்கச் சாலையை கடந்துச் செல்கிறது கோலா. ஆனால், அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்திருந்த தீயால் வெளியேற முடியாத நிலையில் அதால் தப்பிக்க முடியாமல், சிக்கிக்கொள்கிறது.

அவ்வழியாகச் செல்லும் தோனி தோஹர்ட்டி என்ற பெண் பார்த்துவிட்டு, அந்தக் கோலா கரடியைக் காப்பாற்றியுள்ளார். தன் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல், துணிச்சாலாகத் தீயோடு போராடி, அந்த விலங்கை மீட்கும் காட்சி காண்போரை நெகிழச் செய்கிறது. குறிப்பாக, தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி அதன்மேல் போர்த்திவிட்டு, மிக லாகவமாகத் தீயை அணைக்கிறார். பின்னர், உடனடியாக சாலையின் அருகே தூக்கி வந்தவர் தண்ணீரை ஊற்றித் தீயை முற்றிலுமாக அணைக்கிறார். அதன்பின் முதலுதவி செய்து, மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று சிகிச்சையும் அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.