Published:Updated:

செங்கல்பட்டு: அதிகாலையில் கார் ஓட்டப் பயிற்சி! - வாக்கிங் சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடைப்பயிற்சியில் ஈடுபட்ட புது மாப்பிள்ளை செல்வம்
நடைப்பயிற்சியில் ஈடுபட்ட புது மாப்பிள்ளை செல்வம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட புது மாப்பிள்ளை கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ஓரகடத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தார். சில மாதங்களுக்கு முன்பு செல்வத்துக்கு திருமணம் நடந்தது. இவர் தினமும் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவார். அதன்படி கடந்த 13-ம் தேதி செல்வம், அந்தப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். சாலை ஓரத்தில் செல்வம் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று அவர்மீது மோதியது.

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!
விபத்தில் சிக்கிய செல்வம்
விபத்தில் சிக்கிய செல்வம்

இதில் செல்வம் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் இன்று உயிரிழந்தார். அதன்பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிட்த் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகேந்திராசிட்டி பகுதியில் அதிகாலை நேரத்தில் தன் மனைவிக்கு ஒருவர் கார் ஓட்ட கற்றுக் கொடுத்திருக்கிறார். செல்வம் சாலை ஓரத்தில் நடந்து சென்றபோது அந்த கார் அவர்மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸார் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி தற்போது வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு