Published:Updated:

சென்னை: ரன்னிங்கில் பஞ்சரான டயர்! - மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியான இளைஞர்

சாலை விபத்தில் இளைஞர் பலி
சாலை விபத்தில் இளைஞர் பலி

சென்னை மாதவரத்தில் புதிய பர்னிச்சர் கடையைத் தொடங்க திட்டமிட்டிருந்த இளைஞர், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பைக்கில் வந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழபெண்ணாத்தூர் மேரி மாதா நகரைச் சேர்ந்தவர் செஞ்சியப்பன். இவரின் மகன் தங்கராஜ் (26). ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பர்னிச்சர் கடையை நடத்திவருகிறார். புதியதாக மாதவரத்தில் பர்னிச்சர் கடை வைக்க தங்கராஜ் ஏற்பாடு செய்தார். இதற்காக ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பைக்கில் நேற்று மாதவரத்துக்கு வந்தார் தங்கராஜ்.

சாலை விபத்து
சாலை விபத்து

மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலத்தில் தங்கராஜ் வந்தபோது திடீரென பைக்கின் டயர் பஞ்சரானது. அதனால் பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இதில் நிலைதடுமாறிய தங்கராஜ், மேம்பாலத்திலிருந்து சர்வீஸ் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பொதுமக்கள் மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு சம்பவ இடத்துக்கு வந்தார்.

தற்கொலை
தற்கொலை

தங்கராஜின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தங்கராஜின் பைக் பஞ்சரானதே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் மேம்பாலத்திலிருந்து அவர் கீழே விழுந்ததே உயிரிழப்புக்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரரணயில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு