Published:Updated:

அன்று 10-ம் வகுப்பு முடிக்கவில்லை... இன்று 7 லட்சம் விவசாயிகளை வழிநடத்தும் விவசாயப் பெண்!

சவிதா டாக்லே ( linkedin )

வயது குறைந்த நான் குடும்ப பொருளாதாரத்தின் ஆதாரமாக இருப்பது குறித்து, என்னுடைய பெற்றோர் மகிழ்ச்சியடையவில்லை. கடின உழைப்பால் பணம் சம்பாதித்தால் எங்களின் கஷ்டத்தை மாற்ற முடியும் என்று தீர்க்கமாக நம்பினேன்.

அன்று 10-ம் வகுப்பு முடிக்கவில்லை... இன்று 7 லட்சம் விவசாயிகளை வழிநடத்தும் விவசாயப் பெண்!

வயது குறைந்த நான் குடும்ப பொருளாதாரத்தின் ஆதாரமாக இருப்பது குறித்து, என்னுடைய பெற்றோர் மகிழ்ச்சியடையவில்லை. கடின உழைப்பால் பணம் சம்பாதித்தால் எங்களின் கஷ்டத்தை மாற்ற முடியும் என்று தீர்க்கமாக நம்பினேன்.

Published:Updated:
சவிதா டாக்லே ( linkedin )

மகாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் உள்ள பூலாம்பரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 38 வயதான சவிதா டாக்லே. தன்னுடைய 10-ம் வகுப்பு படிப்பைப் பாதியில் நிறுத்திய இவர், 2017-ம் ஆண்டில் ஃபேஸ்புக் குழு ஒன்றைத் தொடங்கி, அதன்மூலம் 7 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்துள்ளார். குறிப்பாக, தன்னுடைய மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்ட பெண்களை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்துள்ளார். விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவராக இருந்தவர், தற்போது விவசாயத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறார். அத்துடன், பலருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

சவிதா டாக்லே
சவிதா டாக்லே
linkedin

இது குறித்து சவிதா டாக்லே கூறுகையில், ``எனக்கும் விவசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தற்செயலாக விவசாயத்துக்கு வந்தேன். என்னுடைய தந்தை, ஒரு நிறுவனத்தில் வேலை செய்தும், தாய் வீட்டை நிர்வகித்தும் வந்தனர். 15 வயதில் நான் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து, மாதம் 900 ரூபாய் வருமானம் ஈட்டி வந்தேன். அந்தத் தொகை அச்சமயத்தில் எங்களுக்கு மிகப்பெரிய தொகை. வீட்டின் தேவைகளையும், சகோதரர்களின் கல்விச் செலவுகளையும் பார்த்துக்கொண்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு வருடங்களில் என்னுடைய சம்பளம் 1,500 ஆக உயர்ந்தது. வயது குறைந்த நான் குடும்ப பொருளாதாரத்தின் ஆதாரமாக இருப்பது குறித்து, என்னுடைய பெற்றோர் மகிழ்ச்சியடையவில்லை. கடின உழைப்பால் பணம் சம்பாதித்தால் எங்களின் கஷ்டத்தை மாற்ற முடியும் என்று தீர்க்கமாக நம்பினேன்.

தந்தைக்கு வேலை பறிபோனதும், பொருளாதார ரீதியாக மேலும் பாதிக்கப்பட்டோம். நான் 10-ம் வகுப்பு முடிக்கும்போது, 2002-ல் எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். 2 ஏக்கர் நிலம் மற்றும் வீடுகளை விற்று, எங்கள் அனைவரது திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.

இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. சமூக அழுத்தத்தால் என் பெற்றோர் இதை முடிவு செய்தனர். அந்த நேரத்தில், என் சகோதரர்கள் இருவரையும் படிக்க வைப்பதில், நான் ஆர்வமாக இருந்தேன். திருமணம் செய்துகொள்வது என் மனதில் கடைசியாக இருந்தது.

 விவசாயம்
விவசாயம்

என்னை விவசாய குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். அவுரங்காபாத்தில் வளர்ந்த எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. விவசாயத்தை நான் தொடங்கும்போது எனக்கு 17 வயதுக்கும் மிகுதியாக இல்லை. பல நாள்களை அழுதுகொண்டே கழித்தேன். ஆனால், என்னுடைய எதிர்காலம் எனக்காகக் காத்திருக்கிறது என்பதை அறியவில்லை.

என்னால் வயலில் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. வயலின் சேற்றில் வழுக்கி விழுந்தது எனக்கு நினைவிருக்கிறது. பண்ணையில் எனக்கு ஒதுக்கப்பட்ட முதல் வேலைகளில் ஒன்று களையெடுக்கும் வேலை. பலரும் என்னுடைய இயலாமையைக் கண்டு நகைத்ததை எண்ணிப் பல நாள்கள் அழுதுள்ளேன். இந்த அனுபவங்கள் என்னைக் கடினமாக்கியது. நான் மெதுவாக வேலைகளைக் கற்றுக்கொண்டேன். வயலில் வேலை செய்வதைத் தேர்ந்தெடுத்து, என் கணவருக்கும் குடும்பத்துக்கும் உதவினேன்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள், சவிதா டாக்லே...