Published:Updated:

`வடிகால்கள், தரைப்பாலங்கள் அமைக்கச் சொல்லியும் செய்யல!' - கனமழையால் மிதந்த 1,000 ஏக்கர் பயிர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மழையில் மூழ்கிய பயிருடன் விவசாயி
மழையில் மூழ்கிய பயிருடன் விவசாயி

``ஒரு அடி உயரத்துக்கு மேல பயிர்கள் வளர்ந்து நிற்குது. நாலஞ்சு நாள் பெய்ஞ்ச மழைக்கே தண்ணி கட்டி நிற்குது. ஒரு ஏக்கருக்கு இது வரைக்கும் 10,000 ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சிருக்கோம். பயிர்கள் தண்ணியில மிதக்குறதப் பார்த்தாலே கண்ணுல கண்ணீருதான் வருது."

தூத்துக்குடி மாவட்டதில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. மக்காச்சோளம், மல்லி, உளுந்து, பாசி, கம்பு, மிளகாய், வெங்காயம் ஆகிய பயிர்களைப் பயிரிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு ராபி பருவத்தின் தொடக்கத்தில் மழை பொய்த்துப்போன காரணத்தால் இரண்டாவது முறையாக விதைப்பு செய்தனர். ஆனால், பயிர்கள் கருகிப் போயின.

தேங்கி நிற்கும் மழை நீர்
தேங்கி நிற்கும் மழை நீர்
தொடர் மழை; வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கும் 100 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்!

மீண்டும் மூன்றாவது முறையாக விவசாயிகள் பருவமழையை நம்பி பயிர்களை விதைத்தனர். பரவலாகப் பெய்த மழையின் காரணமாகப் பயிர்கள் முளைத்து வளர தொடங்கின. 1 அடிக்கு மேல் வளர்ந்த பயிர்களுக்கிடையில் விவசாயிகள், களையெடுப்பு பணிகளைச் செய்து வந்தனர். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் எட்டயபுரம், அயன்வடமாலபுரம், புதூர் பகுதிகளில் நிலங்களில் உள்ள பயிர்களில் மழைநீர் தேங்கியது.

மழைநீர் வடிய வழி இல்லை என்பதால் தேங்கியுள்ள மழைநீரால், சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பயிரிட்ட பயிர்கள் மழைநீரில் மிதந்தும் அழுகியும் சேமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம். ``தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. இந்த வருஷம் சரியான மழை இல்லை.

ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்
ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்

மூணாவது தடவையா விதைச்சிருக்கோம். மழைக்கஞ்சி, ஒப்பாரி, கொடும்பாவி எரித்தல்னு மழை வழிபாடு செஞ்சோம். மழையும் பெய்ஞ்சது. ஒரு அடி உயரத்துக்கு மேல பயிர்கள் வளர்ந்து நிற்குது. நாலஞ்சு நாள் பெய்ஞ்ச மழைக்கே தண்ணி கட்டி நிற்குது. ஒரு ஏக்கருக்கு இது வரைக்கும் 10,000 ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சிருக்கோம். பயிர்கள் தண்ணியில மிதக்குறதப் பார்த்தாலே கண்ணுல கண்ணீருதான் வருது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போ மழைநீர் தேங்கி நிற்குற இடங்கள்ல வடிகால்களோ, தாழ்வான பகுதிகள்ல பாலங்களோ எதுவுமில்ல.இருக்கன்குடி அணைக்கட்டு கால்வாய்களையும் சீரமைச்சா மட்டும்தான் மழைநீர் தேங்காமல் இருக்கும். வடிகால்கள், தரைப்பாலங்கள் அமைத்திட வலியுறுத்தி பல தடவை அதிகாரிங்ககிட்ட மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் எந்தப் பலனுமில்ல. இதனால ஒவ்வொரு மழையிலயும் பயிர்கள் தண்ணியில மிதக்குறதும் நாங்க கண்ணீர் விடுறதும் வாடிக்கையாப் போச்சு. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தரணும். எங்க கோரிக்கையையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்
ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதுமட்டுமன்றி, இனி வரும் காலங்களில் மழைநீர் நிலங்களில் தேங்கமால் வெளியே செல்வதற்கு மழைநீர் வாடிகால் அமைப்பது குறித்தும் விவசாயிகளிடம் ஆலோசனை செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் பேசினோம். ``வடகிழக்குப் பருவமழையில் வழக்கத்தைவிட 20 சதவிகித மழை அதிகமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துள்ளது.

மழையில் மூழ்கிய பயிர்கள்
மழையில் மூழ்கிய பயிர்கள்
``கஜா புயலில்கூட சாயாத மரங்களை இப்படி அநியாயமா அழிச்சிட்டாங்களே!" - ஆதங்கத்தில் மன்னார்குடி மக்கள்

மழையால் என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து, அனைத்துத் துறை அதிகாரிகளும் களத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், அயன்வடமலாபுரம் பகுதியில் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வடிகால்கள், தரைப்பாலங்கள் அமைப்பது குறித்த விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு