Published:Updated:

1 குவிண்டால் ரூ.11,000; உயரும் பருத்தி விலை; காரணம் என்ன?

பருத்தி

இந்த ஆண்டு பருத்திக்கு அதிக விலை கிடைத்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 குவிண்டால் ரூ.11,000; உயரும் பருத்தி விலை; காரணம் என்ன?

இந்த ஆண்டு பருத்திக்கு அதிக விலை கிடைத்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published:Updated:
பருத்தி

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நன்னிலம், வலங்கைமான், கொராடாச்சேரி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பருத்திக்கு பெரும்பாலும் ஒரு குவிண்டாலுக்கு 4500-7000 ரூபாய் வரை தான் கிடைத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு வரலாறு காணாத விலையாக, ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சம் 11,389 ரூபாய் விலை கிடைத்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

பருத்தி
பருத்தி

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருத்தி அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பருத்தி பஞ்சுகளை, உள்ளூர் வியாபாரிகளிடமும், தமிழக அரசால் நடத்தப்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாகவும் விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். கோயம்புத்தூர், திருப்பூர், பண்ருட்டி, விருதுநகர் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பகுதிகளில் இருந்து, பருத்தி மொத்த வியாபாரிகள் இங்கு ஏலத்தில் கலந்து கொண்டு, விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில்தான் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை இவைகளின் தரத்திற்கு ஏற்ப, தாங்கள் விரும்பும் விலையினை ஏல சீட்டில் சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர். திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டி திறக்கப்பட்டு வியாபாரிகள் கேட்ட விலை படிக்கப்பட்டது. அதில், அதிகபட்சமாக ஒரு குவிண்டால பருத்தி ரூ.11,389-க்கும், குறைந்தபட்சமாக ரூ.10,045-க்கும் ஏலம் கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக குவிண்டால் ரூ.8,419-க்கும் பருத்தி விற்பனையானது. இந்த ஆண்டு பருத்திக்கு அதிக விலை கிடைத்திருப்பது இப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விவசயி முகேஷ்
விவசயி முகேஷ்

இதுகுறித்து குடவாசல் அருகே உள்ள வெள்ளை அதம்பாவூரைச் சேர்ந்த பருத்தி விவசாயி முகேஷிடம் பேசியபோது ‘’டெல்டா மாவட்டங்கள்லயே, திருவாரூர் மாவட்டத்துல தான் பருத்தி சாகுபடி அதிகம். நெல்லு மாதிரி இதுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படாது. உப்புத்தன்மையுல்ள மண்ணுலயும் கூட பருத்தி சிறப்பா விளையும். ஏக்கருக்கு அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் தான் உற்பத்திச் செலவாகும். வியாபாரிகள், எங்களோட கிராமங்களுக்கே தேடி வந்து பருத்தியை வாங்கிக்கிட்டு போயிடுவாங்க. உரக்கடைக்காரங்க மூலமாகவும் பருத்தியை விவசாயிகள் விற்பனைச் செய்வாங்க. அதிக பரப்புல பருத்தி உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு போயி விற்பனை செஞ்சிடலாம். எப்படி விற்பனை பண்ணாலும், விவசாயிகளுக்கு உடனடியாக கையில பணம் கிடைச்சிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுமாதிரியான காரணங்களால் தான் எங்க பகுதி விவசாயிகள்., பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டுறது வழக்கம். ஆனால் கடந்த இரண்டரை வருசமா, கொரோனா பிரச்னையால் பருத்தி விவசாயிகள் ரொம்பவே பாதிக்கப்பட்டுட்டாங்க. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பருத்தி விநியோகம் செய்றது ஏகப்பட்ட இடர்பாடுகள். நூல் உற்பத்தியாளர்களுக்கும் பருத்தி கிடைக்காததுனால கடுமையான நெருக்கடி. அதனால நூல் விலை ஏற்போயிடுச்சி. அதேசயம் பருத்தி கொள்முதல் முறையாக நடைபெறாமல் முடங்கியதால, திருவாரூர் மாவட்டத்துல பருத்தி சாகுபடி செஞ்ச விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கலை.

பருத்தி வயல்
பருத்தி வயல்

இதனால் கடந்த இரண்டரை வருசத்துல பருத்தி சாகுபடி குறைஞ்சிடுச்சி. இந்த நிலையில் தான் கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்து, இயல்பான நிலை திரும்பியதாலயும், பருத்திக்கு தட்டுப்பாடு இருக்குறதுனாலயும், இந்த வருசம் பருத்திக்கு அதிக விலை கிடைக்கும்னு விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்துச்சு. இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு எங்க பகுதியில பருத்தி சாகுபடி அதிகம். விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாய தொழிலாலர்களும் கூட, குத்தகை நிலங்கள்ல பருத்தி சாகுபடி செஞ்சி பலன் அடைஞ்சிருக்காங்க.

அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்ல மட்டுமில்ல... உள்ளூர் வியாபாரிகள்க்கிட்டயும் இந்த வருசம் நல்ல விலை கிடைச்சிருக்கு. நான் முதல்கட்டமா அறுவடை செஞ்ச 5 குவிண்டால் பருத்தியை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன். பருத்தியோட தரத்துக்கு ஏற்ப, ஒரு குவிண்டாலுக்கு 8 ஆயிரம் ரூபாய்ல இருந்து 11 ஆயிரம் ரூபாய் வரைக்கு விலை கிடைச்சிக்கிட்டு இருக்கு’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism