பாயின்ட் ஆப் சேல் மூலம் உர விற்பனை... அரசின் முடிவு விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா?!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு  உரங்கள் மானிய விலையில் கூட்டுறவு வங்கிகள் மூலமும் உரக்கடைகள் மூலமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு நேரடி உர மானியத் திட்டத்தை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இதன்படி பாயின்ட் ஆப் சேல் என்ற கருவியை அனைத்து சில்லரை விற்பனை உரக்கடைகளிலும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி அனைத்து உர விற்பனையாளர்களும் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண்ணை சரிபார்த்த பிறகுதான் உரம் விற்பனை செய்ய வேண்டும்.

உரம்

மானிய உரங்கள் விவசாயிகளுக்கு அனைத்து நேரங்களிலும் தடை இல்லாமல் கிடைக்கவும், விவசாயம் சாராத பிற தொழில்களுக்கு உரங்கள் செல்வதை தடுப்பதற்காகவும் இந்த திட்டம் நடை முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரங்கள் விவசாயம் அல்லாது பிற பயன்பாட்டுக்கு விற்பனை செய்வதும் குற்றமாகும். எனவே மானியம் பெற்ற உரங்கள் ஆதார் கார்டு அங்கீகாரங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. யூரியா, பெட்டாஸ், சூப்பர் பாஸ்பேட், டிஏபி, அமோனியம் சல்பேட், காம்பிளக்ஸ் போன்ற உரங்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முன்பு கம்பெனியில் இருந்து மொத்த டீலருக்கு உரம் வரும்.அதன்பின் சில்லறை விற்பனையாளர்களுக்கு உரம் வந்து சேரும் .அந்த உரங்கள் விற்பனை செய்யப்படும் போது உரக் கம்பெனிகளுக்கு மானியம் போய் சேர்ந்து விடும். தற்போது பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் உரம் விற்பனை செய்யும் போது விவசாயிகள் உரங்களை வாங்கிய பின்பு தான் உர கம்பெனிகளுக்கு  மானியம் செல்லும் .உரங்களை வாங்க விவசாயிகள் வரும் போது பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஆதார் எண்ணை பதிவு செய்த பின்னர்தான், வாங்கிய உரங்களின் விபரங்களை பதிவு செய்யவே முடியும். பாயின்ட் ஆப் சேல் கருவியில் நெட் கனெக்ஷன் இல்லை என்றால் காத்திருக்க வேண்டும்.

உரம்

அதனால் விவசாயிகளின் நேரங்கள் விரயம் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து மானியம் பெற்ற சில்லரை உர விற்பனையாளர்கள் மானியம் பெற்ற உரங்களை பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம்தான் விற்பனை செய்ய வேண்டும்  உரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமும், சில்லறை உர விற்பனையாளர்கள் மூலமாகவும் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.கன்னியாகுமரி மாவட்டத்தில் 310 கூட்டுறவு வங்கி உரக்கடைகள் இருக்கின்றன. விவசாயிகளுக்கு பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய 280 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதர கடைகளுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னர் 215 உரக்கடைகள் இருந்தன. ஜிஎஸ்டி  வரியை மத்திய அரசு அமல்படுத்திய பிறகு சுமார் 20 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் உரம் விற்பனை செய்யப்படும் போது இன்னும் பல உரக்கடைகள் மூட வாய்ப்பு உள்ளன. ஏற்கெனவே நசுங்கிக் கொண்டிருக்கும் விவசாயம் கொஞ்ச விவசாயிகள் மூலம்தான் காப்பாற்றப்பட்டு வருகிறது.அவர்களையும் மத்திய அரசின் திட்டங்கள் கஷ்டப்படுத்திதான் பார்க்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!